Home
News

BSNL-ன் சாமர்த்தியம்.. ரூ.200-க்குள் 70 நாள் வேலிடிட்டி திட்டம்.. வாய்ஸ் உடன் தினசரி 2GB டேட்டா.. எந்த பிளான்?

பிஎஸ்என்எல் (BSNL) என்று செல்லமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தற்போது இந்தியாவில் மக்கள் விரும்பும் தொலைத்தொடர்பு (Telecom) நிறுவனமாக மாறிவருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் அதிக நன்மைகளை வழங்கும் திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் அரசு டெலிகாம் நிறுவனம் வெறும் ரூ. 200 விலைக்குள் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (BSNL 70 days validity plan) அறிமுகம் செய்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்ற வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள், தங்களின் அணைத்து ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்த பிறகு கூட்டம் கூட்டமாக மக்கள் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிக்கு மாற துவங்கினர். இத்தனை நாட்களாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நெட்வொர்க் சரியில்லை, இந்த நெட்வொர்க்கை யார் பயன்படுத்துவா? என்ற ஏளனப் பேச்சை பேசியவர்கள் கூட BSNL-க்கு மாறியுள்ளனர்.

BSNL-ன் சாமர்த்தியம்.. ரூ.200-க்குள் 70 நாள் வேலிடிட்டி திட்டம்..

BSNL-ன் சாமர்த்தியம்.. ரூ.200-க்குள் 70 நாள் வேலிடிட்டி திட்டம்:

காரணம், இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே இந்தியாவில் மிகமிக குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த வரிசையில், பிஎஸ்என்எல் சிம் கார்டை (BSNL SIM card) இரண்டாம் நிலை சிம் கார்டாக பயன்படுத்தும் மக்களுக்காக பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு அட்டகாசமான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 200 ரூபாய் செலவிற்குள் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டத்தை BSNL தற்போது வழங்க துவங்கியுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ. 197 திட்டம் (BSNL Rs 197 Plan) இப்போது இந்தியாவின் அணைத்து வட்டங்களிலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த திட்டம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தின் முழுமையான செல்லுபடி காலம் 70 நாட்கள் என்றாலும், இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகளை பிஎஸ்என்எல் நிறுவனம் மிகவும் சாமர்த்தியமாக திட்டமிட்டு வழங்கியுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ. 197 திட்டம் (BSNL Rs 197 Plan):

இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா நன்மை என்று எல்லா விதமான நன்மைகளும் கிடைக்கிறது. ஆனால், இவை அனைத்தும் முதல் 18 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆம், இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை முதல் 18 நாட்களுக்கு பயன்படுத்த கிடைக்கும்.

இந்த தினம் தினசரி 2GB ஹை-ஸ்பீட் டேட்டா நன்மையை 18 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையை 18 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின் 70 நாள் வேலிடிட்டி நன்மை உங்கள் BSNL சிம் கார்டை ஆக்டிவ் நிலையில் வைக்க உதவுகிறது. 70 நாட்களுக்கு முழுமையாக இந்த திட்டம் இன்கம்மிங் அழைப்பு நன்மையை வழங்குகிறது.

18 நாட்களுக்கு பிறகு, கூடுதல் டாக் டைம் அல்லது டேட்டா நன்மை தேவைப்படும் பச்சட்டத்தில், வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் டாக்டைம் வவுச்சர் அல்லது பிஎஸ்என்எல் டேட்டா வவுச்சர் திட்டங்களை ரீசார்ஜ் செய்து பயன்பெறலாம் என்று BSNL அறிவித்துள்ளது. ரூ. 200 விலைக்குள் டீசெண்டான நன்மைகளை பெற விரும்புவோருக்கு இந்த திட்டம் சிறந்த தேர்வாக அமைகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 197 Plan Offers Total 70 Days Validity But Unlimited Calls 2GB Data 100 SMS For 18 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X