ஏழைக்கு ஏத்த பிஎஸ்என்எல்.. ரூ.200 கூட இல்ல.. ஆனால், 70 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2ஜிபி டேட்டா!
இதைவிட கம்மியா யாருங்க கொடுக்க முடியும் என்று மூக்கில் விரல் வைக்கும்படி வெறும் ரூ.197 மதிப்பிலால ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) 70 நாட்கள் வேலிடிட்டியை கொடுக்கிறது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். அடிமட்ட விலையில் சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், பல்வேறு சலுகைகளை இந்த திட்டம் கொடுக்கிறது. இப்படி ரூ.200-க்கும் கீழ் 3 திட்டங்களில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கனவிலும் கொடுக்க முடியாத சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் சலுகைகளை பார்ப்போம்.
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் வழக்கம்போலத்தான கட்டணங்களை உயர்த்தின. ஆனால், இந்த முறை டெலிகாம் கஸ்டமர்கள் மலிவான விலைக்கு திட்டங்களை கொடுக்கும் நிறுவனங்களின் பக்கம் செல்ல திட்டமிட்டுவிட்டனர். அப்படியோ பிஎஸ்என்எல் நிறுவனம் தலை தூக்கி இருக்கிறது.

சாமானிய மக்களுக்கு ஏற்ப அடிமட்ட விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை பிஎஸ்என்எல் வைத்திருக்கிறது. வெறும் ரூ.200 இருந்தால் போதும், அதைவிட மலிவான விலைக்கு ஒரு மாதத்துக்கும் மேல் சலுகைகளை பெற்று கொள்ள முடியும். அப்படி கீழ் வரும் 3 திட்டங்கள் கஸ்டமர்களுக்கு நல்ல லாபம் மற்றும் சலுகைகளை கொடுக்கும் திட்டங்களாக இருக்கின்றன.
பிஎஸ்என்எல் ரூ 197 திட்ட விவரங்கள் (BSNL Rs 197 Plan Details): இந்த திட்டத்தில் அதிப்படியான வேலிடிட்டியை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். அதாவது, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 70 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கும் அதிகமாக இருக்கிறது. இந்த விலைக்கு மற்ற நிறுவனங்களில் இப்படி கிடைக்காது.
அதே நேரத்தில் தினசரி டேட்டா (Daily Data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன. ஆகவே, தினசரிக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 30 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி (STD) கால்களை செய்து கொள்ளலாம்.
மேலும், ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையும் கிடைக்கிறது. இதுபோக தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. ஆனால், மேற்கூறிய வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு முதல் 15 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதன்பிறகு இன்கம்மிங் கால்கள் மட்டுமே கட்டணமின்றி கிடைக்கும்.
ஒருவேளை வேலிடிட்டி முழுவதும் சலுகைகள் வேண்டுமானால், நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.199 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் வேலிடிட்டி நாட்கள் முழுவதும் தினசரி டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், கூடுதல் டேட்டா சலுகைகையும் இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ 199 திட்ட விவரங்கள் (BSNL Rs 199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், மொத்தமாக 60 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்கள் 30 நாட்களுக்கும் பயன்படுத்த கிடைக்கிறது.
முந்தைய ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைத்ததை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை இதிலும் கிடைக்கிறது. இதைவிட மலிவான விலையில் பிஎஸ்என்எல் ரூ.147 திட்டம் (BSNL RS 147 Plan) கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், டேட்டா கம்மியா இருக்கிறது.
அதாவது, இந்த திட்டத்தில் தினசரி டேட்டா சலுகை கிடைக்காது. அதற்கு பதிலாக 10 ஜிபி லம்ப்-சம் டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவை 30 நாட்களுக்கும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இருப்பினும், 30 நாட்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கஸ்டமர்கள் பெற்று கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications