Jio-வை மிஞ்சிய BSNL.. 3 இல் ஒரு பங்கு கொடுத்த போதும் 70 நாளுக்கு ஜமாய்.. எந்த திட்டம்? என்ன விலை?
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் (BSNL), ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய நிறுவனங்கள் தங்களின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் நன்மைகளில் மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன. அந்த வரிசையில் ஒவ்வொரு நிறுவனங்களும் முடிந்த வரை மலிவு விலையில் அதிக நன்மைகளை வழங்கும் திட்டங்களை வழங்கி வருகின்றன. இருப்பினும், இந்தியாவை பொறுத்த வரையில் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் மட்டுமே மிக குறைந்த விலையில் திட்டங்களை வழங்குகின்றன. ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் உடன் உப்பிடுகையில் எது பெஸ்டாக இருக்கிறதென்று பார்க்கலாம்.
ஜியோ நிறுவனம் அதன் வடிக்கையாளர்களுக்காக 70 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் விலை ரூ. 666 ஆகும். ஆம், ஜியோவின் 70 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டதை நிறுவனம் ஜியோ ரூ. 666 திட்டம் (Jio Rs 666 Plan) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம்.

ஜியோ ரூ. 666 திட்டம் (Jio Rs 666 Plan) அதன் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தில் இது மொத்தமாக 105GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இந்த திட்டத்துடன் ஜியோவின் கூடுதல் இலவச நன்மைகளும் கிடைக்கிறது.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்துடன் உங்களுக்கு இலவசமாக ஜியோ சினிமா (ஜீவ் Cinema), ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆகிய நன்மைகள் பயன்படுத்த கிடைக்கிறது. இந்த திட்டம் தினசரி போதுமான டேட்டா நன்மை மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையை தேடும் நபர்களுக்கு சிறந்தது. இது மொத்தமாக இரண்டரை மாத வேலிடிட்டியை வழங்குகிறது.
இதுவொரு புறம் இருக்க, ஜியோவை ஓரம் கட்டுமளவிற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு 70 நாட்கள் செலுப்படியாகும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் வெறும் ரூ. 197 விலையில் (BSNL Rs 197 Plan) மக்களை கவர்ந்துள்ளது. இதுவரை எந்தவொரு நிறுவனமும் வழங்காத விலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் 70 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை வழங்கியுள்ளது.
இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை 18 நாட்களுக்கு வழங்குகிறது. இதன் கீழ் தினசரி 2GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த டேட்டா நன்மையையும் முதல் 18 நாட்களுக்கு கிடைக்குமென்று நிறுவனம் அறிவித்துள்ளது. இத்துடன் 18 நாட்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை போன்றவை கிடைக்கும். இந்த திட்டம் மொத்தமாக 70 நாட்களுக்கு பிஎஸ்என்எல் சிம் கார்டை ஆக்டிவ் ஸ்டேஜ்ஜில் வைத்துள்ளது.
இந்த 70 நாட்களுக்கு உங்களுக்கு இன்கமிங் அழைப்புகள் பயன்படுத்த கிடைக்கும். கூடுதல் டேட்டா மற்றும் டாக் டைம் தேவைப்பட்டால் பிஎஸ்என்எல் வவுச்சர்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications