Home
News

அதிக டேட்டா நன்மையை வழங்கும் பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம்.! முழு விவரம்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. அதேபோல் இந்நிறுவனம் அனைத்து இடங்களிலும் 4ஜி சேவையை கொண்டுவந்தால் இன்னும் அருமையாக இருக்கும். ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் இப்போது 5ஜி சோதனை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம்

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது நாடு முழு உள்ள பயனர்களுக்கு ரூ.187 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த திட்டம் அதிக நன்மைகளை வழங்குகிறது என்றுதான் கூறவேண்டும். இப்போது ரூ.187 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்ததிட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், அழைப்பு நன்மைகள், இலவச ரிங்டோன்களுக்கான அணுகல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளும் உள்ளன.

ஜியோ நிறுவனத்தின் ரூ.199 திட்ட

குறிப்பாக ஜியோ நிறுவனத்தின் ரூ.199 திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். இதுதவிர ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் போன்றவற்றின் அணுகல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் நிறுவனங்களின்

அதேபோல் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களின் கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டங்களில் கூட 1ஜிபி டேட்டா நன்மை தான் கிடைக்கிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் தான் கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது. அதாவது ரூ.187 ப்ரீபெய்ட் திட்டத்தில் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டம்

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 திட்டத்தில் கூடுதல் நன்மைகிடைக்கிறது. அதாவது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் என்று கூறப்படுகிறது.ஆனால் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு இப்போது கூடுதலாக 60 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் 425 நாட்கள் வேலிடிட்டி-ஐ பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. எனவே இந்த திட்டத்தில் அதிக டேட்டா நன்மையை பெறமுடியும். மேலும் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் உள்ளன. அதேபோல் இலவச BSNL ட்யூன்கள் மற்றும் ஓவர்-தி-டாப் (OTT) தளமான Eros Now-க்கான அணுகலை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம்.

நிறுவனத்தின் திட்டங்கள் மிகவும் பயனு

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். ஆனாலும் சரியான 4ஜி நெட்வொர்க் இல்லாதது பிஎஸ்என்எல்-க்கு இன்னும் ஒரு பிரச்சனையாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 187 prepaid plan offering high data benefits: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X