மக்கள் மனதை குளிர வைத்த BSNL-க்கு கும்புடு.. மலிவு விலையில் இப்படி ஒரு பிளானா? அடேங்கப்பா கூட்டம் அள்ளுதே..
இந்தியாவின் மிகவும் பிரபலமான டெலிகாம் நெட்வொர்க் என்றால் இனி யாரும் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) அல்லது வோடபோன் ஐடியா (Vodafone Idea) என்ற பெயர்களை எல்லாம் கூறப்போவதில்லை. இனி ஒட்டுமொத்த இந்திய மக்களும் பிஎஸ்என்எல் (BSNL) என்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நெட்வொர்க்கை தான் இனி பிரபலமான டெலிகாம் நிறுவனம் என்று மக்கள் புகழப்போகிறார்கள். அந்த அளவிற்கு தனியார் நிறுவனங்களை எல்லாம் பிஎஸ்என்எல் ஒரே மாதத்தில் ஓவர்டேக் செய்துவிட்டது. மக்களை ஈர்க்கும் வகையில், பிஎஸ்என்எல் தொடர்ந்து புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
சமீபத்தில், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) அல்லது வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் சொல்லி வைத்தார் போல, ஒரே நேரத்தில் ஒன்றின் பின் ஒன்றாக அவற்றின் ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களின் விலையை 15% முதல் 20% அதிகரித்தன. ஆனால், இந்தியாவில் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களின் விலையை அதிகரிக்காத ஒரே நிறுவனமாக BSNL மட்டுமே திகழ்ந்தது வருகிறது.

புதுப்புது திட்டங்களை அறிமுகம் செய்து மக்களை ஈர்க்கும் BSNL:
விலை அதிகரிக்காத ஒரே நிறுவனமாக மட்டும் இல்லாமல், பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது மக்கள் ஈர்க்கும் வகையில் பல புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், BSNL தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம் தான் பிஎஸ்என்எல் ரூ. 184 திட்டம் (BSNL Rs 184 Plan). இத்திட்டம் இப்போது மிகவும் மலிவு விலையில் பல நன்மைகளை வழங்குகிறது. இத்திட்டம் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்பது இங்கே.
பிஎஸ்என்எல் ரூ. 184 திட்டம் (BSNL Rs 184 Plan):
இந்த திட்டம் 184 ரூபாய் விலையில் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. இத்துடன் கிடைக்கும் நன்மைகளாக, பயனர்கள் தினமும் 1GB டேட்டா நன்மையை பெறுகிறார்கள். இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையையும் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி செல்லுபடியாகும் 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தமாக 28GB ஹை-ஸ்பீட் டேட்டா கிடைக்கிறது.
BSNL 4G சேவை எப்போது தமிழ்நாட்டில் முழுமையாக கிடைக்கும்?
இந்த திட்டத்துடன் கூடுதலாக உங்களுக்கு இலவச பிஎஸ்என்எல் டியூன்ஸ் நன்மையையும் நிறுவனம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாட்டில் அதன் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை அக்டோபர் இறுதிக்குள் அறிமுகம் செய்துவிடும் என்று வாக்குறுதி வழங்கியுள்ளது. தமிழக பிஎஸ்என்எல் வட்டத்தை முழுமையான 4ஜி வட்டமாக மாற்றும் வேலைகளை நிறுவனம் முழுவீச்சில் வேகமாக செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
BSNL 5G சேவை எப்போது பயன்படுத்த கிடைக்கும்?
பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாட்டில் அதன் 4ஜி சேவையை அறிமுகம் செய்த பிறகு, சரியாக 6 மாதம் முதல் அதிகபட்சமாக 9 மாதத்திற்குள் தமிழ்நாட்டில் உள்ள பல இடங்களில் பிஎஸ்என்எல் 5ஜி சேவையை அறிமுகம் செய்யுமென்று தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இப்போது ஒவ்வொரு நகரமாக பிஎஸ்என்எல் 4ஜி சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை நம்பி இடம் மாறிக்கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








