BSNL.. 60 வயசு ஆச்சா.. நவ.18 கடைசி.. மாசம் ரூ.151-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 2ஜிபி டேட்டா!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது 60 வயது மற்றும் அதற்கு மேல் வயதுடைய சீனியர் சிட்டிசன்களுக்கு மலிவான விலைக்கு வருடாந்திர திட்டத்தை கொடுத்து வருகிறது. இந்த திட்டம் நவம்பர் 18ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்கும். ஆகவே, நாளை கடைசி தேதியாக இருப்பதால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் சம்மன் திட்டம் (BSNL Samman Plan) கடந்த மாதம் தொடங்கப்பட்டது. புதிய பிஎஸ்என்எஸ் சிம் கார்டு (New BSNL SIM Card) வாங்கும் கஸ்டமர்களில் சீனியர் சிட்டிசன்களாக இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் கொடுக்கப்படும். 60 வயது அல்லது அதற்கு மேல் வயது இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டும் அடிமட்ட விலைக்கு கொடுக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் விலை ரூ.1812 ஆக இருக்கிறது. இந்த விலைக்கு 12 மாதங்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, மாதத்துக்கு ரூ.151 மட்டுமே சீனியர் சிட்டிசன்களுக்கு செலவாகிறது. இது மற்ற டெலிகாம் நிறுவனங்களில் கிடைக்காத விலையாக இருக்கிறது. இதே சலுகைகளை பிஎஸ்என்எல்லில் பெற வேண்டுமானால், மற்ற கஸ்டமர்கள் ரூ.2399 செலவு செய்து ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும்.
பிஎஸ்என்எல் ரூ 1812 சம்மன் திட்ட விவரங்கள் (BSNL Rs 1812 Samman Plan Details): பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய சிம் கார்டு வாங்கியவுடன் இந்த சம்மன் திட்டத்தை பெற்று கொள்ளலாம். இதை ரீசார்ஜ் செய்தவுடன் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த நாட்கள் முழுவதும் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும்.
இந்த சலுகைகள் போக பிஐடிவி பிரீமியம் (BiTV Premium) சந்தாவானது கூடுதல் கட்டணம் இல்லாமல், முற்றிலும் இலவசமாக கிடைக்கும். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் பேர் யூசேஜ் பாலிசி டேட்டா கஸ்டமர்களுக்கு கிடைக்கும். 365 நாட்களுக்கு 730 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
அதேபோல வேலிடிட்டி முழுவதும் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) அன்லிமிடெட் சலுகையில் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை இந்த சம்மன் திட்டம் கொடுக்கிறது. இந்த சலுகைகளுக்கு அடுத்து 25+ ஓடிடி ஆப்கள் மற்றும் 450+ லைவ் டிவி சேனல்களுடன் பிஐடிவி பிரீமியம் சந்தா கொடுக்கப்படுகிறது.
நவம்பர் 18ஆம் தேதி வரையில் புதிய சிம் கார்டு வாங்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் கிடைக்கும். இதேபோல மற்றொரு வருடாந்திர திட்டத்தையும் (Yearly Plan) சலுகையில் பெறுவதற்கும் நவம்பர் 18ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் கிடைக்கும். இந்த திட்டத்தின் விலையில் இருந்து டிஸ்கவுண்ட் போக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ 1999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை நவம்பர் 18ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்தால், இதில் 2.5 சதவீத டிஸ்கவுண்ட் கிடைக்கும். இந்த தொகை கஸ்டமர்களுக்கு ரீபண்ட் செய்யப்படும். ஆகவே திட்டத்தை மேலும் மலிவாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்துக்கும் கிட்டத்தட்ட வருடாந்திர வேலிடிட்டி கிடைக்கும்.
ஏனென்றால், 330 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதில் தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா, 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களை அன்லிமிடெட் சலுகையில் செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். இந்த திட்டங்களை நவம்பர் 18ஆம் தேதிக்குள் பெற்றுவிடுங்கள். பிறகு கிடைக்காது.


Click it and Unblock the Notifications








