Home
News

BSNL.. 60 வயதுக்கு மேல.. மாதாந்திரம் ரூ.151 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!

பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் பிஎஸ்என்எஸ் 4ஜி சேவையை தொடங்கி வைத்ததில் இருந்து, பல்வேறு சலுகைகளை அந்த நிறுவனம் கொடுக்க தொடங்கிவிட்டது. இப்போது 60 வயதுக்கு மேல் இருக்கும் சீனியர் சிட்டிசன்களுக்கு மலிவான விலைக்கு வருடாந்திர திட்டத்தை (Yearly Plan) கொடுக்கிறது. புதிய சிம் கார்டுடன், வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்களை இலவசமாக கொடுப்பது மட்டுமல்லாமல், வருடாந்திர திட்டத்தை அடிமட்ட விலைக்கு கொடுக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) கிடைக்கும் முழு சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

60 வயதுக்கு மேல் இருக்கும் சீனியர் சிட்டிசன்கள், புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டை வாங்கினால் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். அதாவது, பிஎஸ்என்எல் சிம் கார்டு இப்போது, இலவசமாக கொடுக்கப்படுகிறது. இதை வாங்கினால், ரூ.1 விலை கொண்ட ரீசார்ஜ் திட்டம் பிரத்யேகமாக கிடைக்கிறது. இதில் 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

BSNL.. 60 வயதுக்கு மேல.. மாதாந்திரம் ரூ.151 போதும்.. 365 நாட்கள்!

மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். அதுவே, புதிய சிம் கார்டை வாங்குவோருக்கு 60 வயதுக்கு மேல் இருந்தால், அவர்களுக்கு ரூ.1812 விலை கொண்ட பிரத்யேக திட்டம் கிடைக்கும். இதில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இதில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், பிஐடிவி (BiTV) சந்தாவும் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 1812 திட்ட விவரங்கள் (BSNL Rs 1812 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை வருகிற நவம்பர் 18ஆம் தேதி வரையில் மட்டுமே பெற்று கொள்ள முடியும். ஆகவே, புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கியுடன் இதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கும்.

ஆகவே, சீனியர் சிட்டிசன்களுக்கு வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கும். அதேபோல நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படுகிறது. இதுபோக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது.

இந்த சலுகைகள் மட்டுமல்லாமல், பிஐடிவி பிரீமியம் (BiTV Premium) சந்தாவும் 6 மாதங்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதில் 25+ ஓடிடி ஆப்கள் மற்றும் 450+ லைவ் டிவி சேனல்களின் சந்தாவும் கிடைக்கும். இந்த திட்டத்தையே சீனியர் சிட்டிசன்களுக்கு மட்டும் பிரத்யேகமாக பிஎஸ்என்எல் நிறுவனம் கொடுக்கிறது. நவம்பர் 18ஆம் தேதிக்குள் இதை பெற்று கொள்ள வேண்டும்.

அதன்பிறகு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. அதேபோல பழைய கஸ்டமர்களுக்கு 60 வயதுக்கு மேல் ஆகிய இருந்தாலும், அவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது. இதே சலுகைகளை வழக்கம்போல ரீசார்ஜ் செய்யும் திட்டத்தில் பெற்று கொள்ள வேண்டுமானால், ரூ.2399 விலை கொண்ட வருடாந்திர திட்டத்துக்கு செல்ல வேண்டும். இதன் சலுகைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் அதே 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா உள்ளது. மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம்.

ஆனால், புதிய கஸ்டமர்களுக்கு ரூ.1812 விலைக்கு கிடைக்கிறது. இந்த விலைக்கு 12 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, ஒரு மாதத்துக்கு தேவைப்படும் தொகையை கணக்கிட்டால் ரூ.151 மட்டுமே தேவைப்படுகிறது. இதனால், சீனியர் சிட்டிசன்கள் மலிவான விலைக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெற்று கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 1812 Plan With 365 Days Validity Unlimited Voice Calls 2GB Data Check BSNL Samman Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X