Home
News

ஒரே செட்டில்மெண்ட்.. ரூ.1799-க்கு 6500GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. ஓடிடி சந்தா.. BSNL இறக்கிய திட்டம்!

என்னங்க சொல்றீங்க, என்று பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பிராட்பேண்ட் கஸ்டமர்களும் மூக்கில் விரல் வைக்கும்படி ஒரு பிராட்பேண்ட் திட்டத்தில் 6500 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 300 எம்பிபிஎஸ் ஸ்பீடு டேட்டா மட்டுமல்லாமல், 8 ஓடிடி ஆப்களின் சந்தாவும் கிடைக்கிறது. இந்த பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டத்தின் (BSNL Broadband Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ 1799 திட்ட விவரங்கள் (BSNL Rs 1799 Plan Details): இதுவொரு ஃபைபர் அல்ட்ரா (Fiber Ultra) மற்றும் ஓடிடி சந்தா (OTT Subscription) கொண்ட திட்டமாகும். ஆகவே, இந்த திட்டத்தில் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் பிராட்பேண்ட் டேட்டா வழங்கப்படும். இந்த டேட்டாவை 20 டிவைஸ்கள் வரையில் கனெக்ட் செய்து பயன்படுத்தலாம்.

ஒரே செட்டில்மெண்ட்.. ரூ.1799-க்கு 6500GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஒரு மாதத்துக்கு அதிகபட்சம் 6500 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 6500 ஜிபி டேட்டாவுக்கு பிறகு வேலிடிட்டி மிச்சம் இருந்தால் அப்போது 20 எம்பிபிஎஸ் (20Mpbs) வேகத்துக்கு டேட்டா குறைக்கப்படும். ஆகவே, வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) இந்த பிஎஸ்என்எல் ரூ 1799 திட்டத்தில் உறுதி செய்யப்படுகிறது.

சொல்லப்போனால், மாதத்துக்கு 6500 ஜிபி டேட்டா கிடைத்தால், ஒரு நாளுக்கு 216 ஜிபி டேட்டா கஸ்டமர்களுக்கு பயன்படுத்த கிடைக்கிறது. இது ஓடிடி, ஆன்லைன் கேமிங்குக்கு போதுமான டேட்டா சலுகையாக இருக்கிறது. இந்த டேட்டா சலுகை போக பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகை கிடைக்கிறது.

அதாவது, லேண்ட்லைன் மூலம் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி கால்கள் (STD Calls) பயன்படுத்த கிடைக்கிறது. ஆனால், லேண்ட்லைன் டிவைஸ்கள் கஸ்டமர்களிடம் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் கொடுக்கப்படாது என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த டேட்டா, வாய்ஸ் கால்கள் போக ஓடிடி ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது.

ஆகவே, இந்த பிஎஸ்என்எல் ரூ 1799 திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), யூப்டிவி (YuppTV), சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஹங்கமா (Hungama), ஷீமாரூமீ (ShemarooMe) மற்றும் எபிக்ஆன் (EpicON) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த திட்டம் எப்படி பார்த்தாலும் அதிகப்படியான சலுகைகளை கொடுக்கிறது.

இந்த பிராட்பேண்ட் திட்டத்துக்கு ஒரு மாதம் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இதைவிட மலிவான விலைக்கு இதே ஓடிடி ஆப்களுடன் திட்டம் வேண்டுமானால் ரூ 1499 விலைக்கு மற்றொரு பிராட்பேண்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்திலும் அதிகப்படியான டேட்டா, வாய்ஸ் கால்கள் சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ 1499 திட்ட விவரங்கள் (BSNL Rs 1499 Plan Details): இந்த திட்டத்தில் முந்தைய திட்டத்தைவிட குறைவாக டேட்டா வேகம் இருக்கும். ஆகவே, 250 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம். ஒரு மாதத்துக்கு 6000 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும் அதற்கு பிறகு 15 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா வேகம் குறைக்கப்படும்.

இந்த திட்டத்துக்கும் லேண்ட்லைன் மூலம் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி கால்கள் கிடைக்கிறது. அதேபோல முந்தைய திட்டத்தில் பார்த்த ஜியோஹாட்ஸ்டார், யூப்டிவி, சோனிலிவ், ஜீ5, ஹங்கமா, ஷீமாரூமீ, எபிக் ஆன் போன்ற ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. இந்த பிஎஸ்என்எல் ரூ 1499 திட்டத்துக்கும் ஒரு மாத வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 1799 Plan With 300Mbps Speed Data Unlimited Calls OTT Subscriptions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X