BSNL மாஸ்.. முழுவீச்சில் 26GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்.. தினமும் SMS.. இப்படியொரு சூப்பர் பிளானா?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அதன் பயனர்களுக்கு பல ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid plan) வழங்கி வருகிறது. அந்த வரிசையில், இதுவரை எந்தவொரு இந்திய டெலிகாம் (Indian Telecom) நிறுவனமும் வழங்காத ஒரு சூப்பர் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (Super Prepaid Recharge Plan) இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்க துவங்கியுள்ளது. இந்த திட்டம் பயனர்களுக்கு தேவையான டேட்டா (Data), வாய்ஸ் கால் (Voice calls) நன்மை மற்றும் எஸ்எம்எஸ் (SMS) நன்மை போன்ற அணைத்து நன்மைகளையும் வழங்குகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ப்ரீபெய்ட் திட்டம் ரூ. 153 என்ற மிகவும் மலிவான விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ. 153 திட்டம் (BSNL Rs 153 Plan) என்ன நன்மைகளை அதன் பயனர்களுக்கு வழங்குகிறது? இதில் எவ்வளவு டேட்டா நன்மை கிடைக்கிறது? எவ்வளவு வாய்ஸ் கால் நன்மை கிடைக்கிறது? இதன் செல்லுபடியாகும் வேலிடிட்டி எவ்வளவு என்பது போன்ற தகவலை இப்போது விபரமாக பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ. 153 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 153 Prepaid Plan):
பிஎஸ்என்எல் ரூ. 153 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 153 Prepaid Plan) ஒரு சிறந்த மலிவு விலை விருப்பமாக திகழ்கிறது. காரணம், இவ்வளவு குறைத்த விலையில் ஒரு பயனருக்கு தேவையான டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் போன்ற அணைத்து நன்மைகளுடன், கூடுதல் இலவச நன்மைகளையும் இந்த திட்டம் வழங்குகிறது. இதனால் தானோ என்னவோ இந்த திட்டம் சற்று பிரபலமான திட்டமாக (Famous Plan) திகழ்கிறது.
பிஎஸ்என்எல் வழங்கும் இந்த ரூ. 153 திட்டம் முழுவீச்சில் 26ஜிபி டேட்டா நன்மையை (26GB data benefits) வழங்குகிறது. முழுவீச்சில் என்பதற்கான அர்த்தம், இந்த திட்டம் தினசரி வரம்பு எதுவும் இல்லாமல், முழுமையாக 26ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த டேட்டாவின் அளவு முடிந்த பிறகு, பிஎஸ்என்எல் நிறுவனம் 40 Kbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா (unlimited data) நன்மையையும் வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது மக்களே.
இத்துடன் இந்த பிஎஸ்என்எல் ரூ. 153 திட்டத்தில் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை கிடைக்கிறது. இது லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) என்று எல்லா அழைப்புகளையும் அன்லிமிடெட்டாக வழங்குகிறது. இது தவிர இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இந்த பொதுவான நன்மைகள் தவிர, இந்த திட்டத்துடன் பிஎஸ்என்எல் நிறுவனம் கூடுதல் சிறப்பு நன்மைகளையும் வழங்குகிறது.
26 நாள் வேலிடிட்டியுடன் 26GB டேட்டா.. எக்ஸ்ட்ராவாக இலவச நன்மைகள்:
இதில், பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேம் ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music), மற்றும் வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) போன்ற இலவச சேவைகளையும் பிஎஸ்என்எல் நிறுவனம் இணைத்து வழங்குகிறது.
பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள இந்த ரூ. 153 திட்டத்தின் செலுப்படியாகும் வேலிடிட்டி பற்றி பேசுகையில், இது 26 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (BSNL 26 days validity plan) உடன் வருகிறது. இதுவரை எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் வழங்காத ஒரு வேலிடிட்டி மற்றும் நன்மையை BSNL நிறுவனம் தற்போது வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications