Home
News

BSNL.. ரூ.153-க்கு முடிச்சாச்சு.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1 ஜிபி டேட்டா.. 100 எஸ்எம்எஸ்கள்.. வேலிடிட்டி எவ்வளவு?

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்களில் தினசரி டேட்டாவுடன் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை ரூ.189 முதல் தொடங்குகின்றன. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ரூ.153 விலையில் இருந்தே தொடங்குகின்றன. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ.153 திட்ட விவரங்கள் (BSNL Rs 153 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 24 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த விலைக்கு ஏற்ற வேலிடிட்டியாகவே இது இருக்கிறது. ஏனென்றால், இதில் தினசரி டேட்டா கிடைக்கிறது. இதுபோன்ற மலிவான திட்டங்களில் லம்ப்-சம் டேட்டா மட்டுமே கொடுக்கப்படும். ஆனால், இதில் தினசரிக்கு 1 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

BSNL.. ரூ.153-க்கு முடிச்சாச்சு.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1 ஜிபி டேட்டா!

ஆகவே, மொத்தமாக கிடைக்கும் 24 நாட்கள் வேலிடிட்டியில் 24 ஜிபி டேட்டாவை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் இந்த பிஎஸ்என்எல் ரூ.153 திட்டம் கொடுத்து இருக்கிறது. அதாவது, 1 ஜிபி டேட்டா முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா கொடுக்கப்படும். டேட்டாவை போல எஸ்எம்எஸ் கிடைக்கிறது.

அதாவது, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை இந்த பிஎஸ்என்எல் ரூ.153 திட்டம் கொடுத்து இருக்கிறது. இந்த சலுகைகளை இதே விலைக்கு மற்ற நிறுவனங்களில் எதிர்பார்க்க முடியாது.

ஒருவேளை 24 நாட்கள் வேலிடிட்டி போதாது என்றால், மாதாந்திர வேலிடிட்டியுடன் கிடைக்கும் பிஎஸ்என்எல் ரூ.229 திட்டத்தை கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் விலைக்கு ஏற்ப டேட்டா சலுகைகள் கூடுதலாக கிடைக்கும். அதே நேரத்தில் காலண்டர் மாத வேலிடிட்டியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.229 திட்ட விவரங்கள் (BSNL Rs 229 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு மாதாந்திர வேலிடிட்டி (Monthly Validity) கிடைக்கிறது. அதாவது, 28 நாட்கள் வேலிடிட்டி, 30 நாட்கள் வேலிடிட்டி என்று கணக்கில்லாமல், மாதத்தில் இருக்கும் அத்தனை நாட்களுக்கும் வேலிடிட்டி கிடைக்கும். 30 நாட்களை கொண்ட மாதத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

அதேபோல 31 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மாதத்தில் ரீசார்ஜ் செய்தால் 31 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். முந்தைய திட்டத்தில் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்தது. ஆனால், இதில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா (2GB Data Per Day) சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, வேலிடிட்டி முழுவதும் அதிகபட்சமாக 64 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும்.

மேலும், 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் இந்த பிஎஸ்என்எல் ரூ.229 திட்டத்துக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாக உள்ளன. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. மேலும், இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வருகின்றன.

Best Mobiles in India

English summary
BSNL Rs 153 Plan With Unlimited Voice Calls 1GB Data Per Day 24 Days Validity Check Plan Voucher
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X