BSNL-னா இதுதான் சார்.. இனிமே ரூ.153-க்கு திட்டம்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 26ஜிபி டேட்டா.. 26 நாட்கள் வேலிடிட்டி!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கொடுக்கும் விலையை பார்த்தால், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களின் கஸ்டமர்கள் நிச்சயம் மூக்கில் விரல் வைத்து விடுவார்கள். ஏனென்றால், அவ்வளவு மலிவான விலைக்கு ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) கிடைக்கின்றன. இப்போது பார்க்கப் போகும் மூன்று திட்டங்கள் மற்ற நிறுவனங்களால் கொடுக்க முடியாத விலைக்கு கிடைக்கின்றன. இந்த திட்டங்கள் ரூ.200-க்கும் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.
பிஎஸ்என்எல் ரூ 108 திட்ட விவரங்கள் (BSNL Rs 108 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் தினசரி டேட்டாவுடன் அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. இந்த பிஎஸ்என்எல் திட்டத்தை பெறுகிற கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. ஆகவே, இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்யலாம்.

இதுபோக 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையுடன் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, 28 நாட்களுக்கு 28 ஜிபி டேட்டாவை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பெற்று கொள்ள முடிகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடையாது. அடிமட்ட விலையாக இருப்பதால், அந்த சலுகை கிடைக்கவில்லை.
இந்த விலைக்கு வேறு நிறுவனங்களில் திட்டங்கள் கிடைக்காது. ஆகவே, வெறும் ரூ.108 இருந்தால் போதும், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 28 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டாவை பெற்று கொள்ள முடியும். ஒருவேளை எஸ்எம்எஸ் சலுகைகளும் வேண்டுமானால், அடுத்து வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.
பிஎஸ்என்எல் ரூ 153 திட்ட விவரங்கள் (BSNL Rs 153 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டாவுடன் எஸ்எம்எஸ் சலுகையும் வருகிறது, ஆனால் டேட்டாவை லம்ப்-சம் முறையில் மட்டுமே பெற்று கொள்ள முடியும். அதாவது, முந்தைய திட்டத்தில் தினசரிக்கு டேட்டா கிடைத்தது, ஆனால் இதில் 26 ஜிபி டேட்டா மொத்தமாக கொடுக்கப்படுகிறது.
அதாவது, தினசரிக்கு இவ்வளவு டேட்டா மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற வரம்பு இல்லாமல் 26 ஜிபி டேட்டாவை எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 26 ஜிபி டேட்டாவுக்கு பிறகு வேலிடிட்டி மிச்சம் இருந்தால் உங்களுக்கு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படும்.
வாய்ஸ் கால்களை பொருத்தவரையில், முந்தைய திட்டத்தில் பார்த்ததை போலவே லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் அன்லிமிடெட் சலுகையில் கிடைக்கிறது. ஆனால், இதில் கூடுதலாக 100 எஸ்எம்எஸ் சலுகைகள் நாளொன்றுக்கு அனுப்ப கிடைக்கிறது. இந்த சலுகைகளை 26 நாட்கள் வேலிடிட்டியில் பெற்று கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ 199 திட்ட விவரங்கள் (BSNL Rs 199 Plan Details): முந்தைய இரண்டு திட்டங்களையும் போல்லல்லாமல், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வழக்கமான முறையில் கிடைக்கிறது. அதாவது, தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை இந்த திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆகவே, 30 நாட்கள் வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 60 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த 2 ஜிபிக்கு பிறகு முந்தைய திட்டங்களில் கிடைத்த 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்கள் 30 நாட்களுக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








