BSNL ஒரே போடு.. ரூ.153 க்கு ரீசார்ஜ் முடிஞ்சு.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1 ஜிபி டேட்டா.. வேலிடிட்டி எவ்வளவு?
பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களுக்கு அடிமட்ட விலையில் ப்ரீபெய்ட் திட்டங்கள் கிடைப்பதால், மாதந்தோறும் ரீசார்ஜ் செய்வது பெரிய பிரச்சனையாக இருக்காது. ஏனென்றால், மற்ற நிறுவனங்களில் நினைத்து பார்க்க முடியாதபடி ரூ.99 முதல் திட்டங்கள் கிடைக்கின்றன. இதில் பிஎஸ்என்எல் ரூ.153 திட்டத்தை கஸ்டமர்கள் போட்டிப்போடு ரீசார்ஜ் செய்து வருகின்றனர்.
பிஎஸ்என்எல் ரூ.153 திட்ட விவரங்கள் (BSNL Rs 153 Plan Details): ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களைவிட மலிவான விலைக்கு இந்த திட்டம் கிடைப்பதால், 24 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இருப்பினும், லம்ப்-சம் டேட்டாவை கொடுத்து சமாளிக்காமல், நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது.

ஆகவே, மொத்தமாக 24 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், 1 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) இந்த பிஎஸ்என்எல் ரூ.153 திட்டம் கொடுத்து இருக்கிறது. எஸ்எம்எஸ் சலுகையும் இருக்கிறது.
நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். எப்படி பார்த்தாலும், இந்த திட்டம் மலிவான விலைக்கே கிடைக்கிறது. ஒரு மாதத்துக்கும் கொஞ்சம் குறைவாக வேலிடிட்டி போதுமானால், இந்த பிஎஸ்என்எல் ரூ.153 ப்ரீபெய்ட் திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யலாம். இதைவிட அதிக டேட்டா, வேலிடிட்டிக்கு மற்றொரு திட்டம் உள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.229 திட்ட விவரங்கள் (BSNL Rs 229 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டாவும் வேலிடிட்டியும் அதிகமாக கிடைக்கும். அதாவது, மாதாந்திர வேலிடிட்டியை கொடுக்கிறது. எந்த தேதியில் ரீசார்ஜ் செய்கிறோமோ அடுத்த மாதம் அதே தேதி வரையில் சலுகைகள் கிடைக்கும். இந்த திட்டத்துக்கு 1 மாதம் வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம்.
இந்த நாட்களில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். ஆகவே, வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் இந்த பிஎஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து இருக்கிறது.
மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இந்த வேலிடிட்டியும் வேண்டாம், வருடம் முழுவதும் அதிக டேட்டா மற்றும் சலுகைகள் வேண்டுமானால், பிஎஸ்என்எல் ரூ.2,399 திட்டத்துக்கு கஸ்டமர்கள் செல்லலாம். இதில் வருடம் முழுவதும் வேலிடிட்டி கிடைக்கும். டேட்டாவும் அதிகமாக கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், வருடம் முழுவதுக்கும் வேறு ரீசார்ஜ் தேவைப்படாது. அதேபோல தினசரி டேட்டாவும் போதுமானதாக இருப்பதால், டேட்டா வவுச்சர்களுக்கு கஸ்டமர்கள் செல்ல வேண்டியது கிடையாது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.
இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ள முடியும். முந்தைய திட்டங்களை போலவே தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ள முடியும். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. ஆகவே, 730 ஜிபி டேட்டாவை மொத்தமாக பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்படும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை கஸ்டமர்கள் அதிகமாக ரீசார்ஜ் செய்து வருகின்றனர். ஏனென்றால், மாதத்துக்கு ரூ.199 செலவில் இந்த வருடாந்திர திட்டம் கிடைக்கும். பட்ஜெட்டுக்கு ஏற்ப இந்த திட்டங்களை கஸ்டமர்கள் ஆப்ஷனில் எடுத்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications