Home
News

அள்ளி கொடுத்த அம்பானியை மிஞ்சிய BSNL.. 13 நன்மை ஒரே திட்டத்தில்.. ரூ.155-க்கும் குறைந்த விலை.. எந்த திட்டம்?

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது இந்தியாவின் டாப் டெலிகாம் நிறுவனமாக மாறிவிட்டது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea), போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களை காட்டிலும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது மிகவும் மலிவு விலையில் பல புதிய திட்டங்களை வழங்கி வருகிறது. தனியார் நிறுவனங்களும் சலிக்காமல் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.155 விலைக்கு கீழ் மக்களை ஈர்க்க துவங்கியுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் பல தசாப்தங்களுக்கு பிறகு, மீண்டும் தலை ஓங்க துவங்கியுள்ளது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea), போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் அவற்றின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை 25% வரை அதிகரித்த பிறகு, மக்கள் அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனத்தை நம்ப துவங்கியுள்ளனர்.

அள்ளி கொடுத்த அம்பானியை மிஞ்சிய BSNL.. 13 நன்மை ஒரே திட்டத்தில்..

அள்ளி கொடுத்த அம்பானியை மிஞ்சிய BSNL.. 13 நன்மை ஒரே திட்டத்தில்:

பிஎஸ்என்எல் 2ஜி (BSNL 2G) வேகமாக இருந்தாலும் சரி, 3ஜி (BSNL 3G) வேகமாக இருந்தாலும் சரி, ரீசார்ஜ் மலிவு விலையில் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இருப்பினும், பிஎஸ்என்எல் பயனர்கள் உண்மையிலேயே இப்போது தான் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். காரணம், பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் அதன் 4ஜி சேவையை ஒவ்வொரு வட்டமாக விரிவுபடுத்தி வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 4ஜி சேவையை அக்டோபர் மாத இறுதிக்குள் எல்லா முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் மற்றும் குக்கிராமங்கள் என்று எல்லா இடங்களிலும் கிடைக்க செய்யுமென்று வாக்குறுதியை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 5ஜி சேவையை அறிமுகம் செய்யுமென்று கூறியுள்ளது. இதன் காரணமாக பிஎஸ்என்எல் பயனர்கள் தற்போது குஷியாக இருக்கிறார்கள்.

பிஎஸ்என்எல் ரூ. 153 திட்டம் (BSNL Rs 153 Plan):

இவர்களை இன்னும் குஷிப்படுத்தும் விதமாக, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தற்போது அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ், புதிதாக ரூ. 153 என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ. 153 திட்டம் (BSNL Rs 153 Plan) குறிப்பாக ஹெவி டேட்டா யூஸர் பயனர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ. 153 திட்டம் ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 153 Prepaid Plan) திட்டம் 13 வகையான நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் முதலில் வழக்கமான 4 முக்கிய ரீசார்ஜ் நன்மைகளை வழங்குகிறது. இதில் டேட்டா, வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் உடன் இலவச நன்மைகள் அடங்கும். இந்த திட்டம் 26GB டேட்டா நன்மையை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 153 திட்டம் ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 153 Prepaid Plan):

இத்திட்டத்துடன் கிடைக்கும் 26GB டேட்டா நன்மை முடிந்த பிறகு, இணைய வேகம் 40Kbps ஆக குறைக்கப்படும். இந்த திட்டத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மையையும் கிடைக்கிறது. இந்த திட்டம் 26 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. இத்துடன் கூடுதல் நன்மையையும் கிடைக்கிறது.

இந்த BSNL Rs 153 Plan, அதன் பயனர்களுக்கு இலவச நன்மையாக ஹேண்டி கேம்ஸ் (Hardy Games), சேலஞ்சர் அரினா கேம்ஸ் (Challenger Arena Games), கேம்ஆன் (Gameon), ஆஸ்ட்ரோடெல் (Astrotell), கேமியம் (Gameium), சிங்க் மியூசிக் (Zing Music), வாவ் எண்டெர்டைன்மெண்ட் (WOW Entertainment), பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), மற்றும் லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast) போன்றவற்றை வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 153 Plan With 13 Benefits Launched In India Check All The Benefits Details Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X