Home
News

இது 20-20 மேட்ச் இல்லை.. BSNL-ன் 26-26 பிளான்.. Jio, Airtel, Vi-லாம் ஆள் அவுட் தான் போலயே.. எந்த விலை திட்டம்?

இந்திய தொலைத்தொடர்பு துறையில் (Indian Telecommunication) யாரும் எதிர்பார்த்திடாத பல மாற்றங்கள் நம்ப முடியாத வகையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்த பிறகு, தினசரி புதிய திட்டங்கள் மற்றும் திட்டங்களில் மாற்றங்கள் என்று பல விஷயங்கள் நடந்துகொண்டே இருக்கிறது. இதனால் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மக்களை காப்பாற்றும் விதமாக இப்போது அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) செயல்பட்டு வருகிறது.

ஆம், மக்கள் எதிர்பார்க்கும் குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ஒரே டெலிகாம் நிறுவனமாக பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது மாறியுள்ளது. இதனால், பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிக வாடிக்கையாளர்களை தனது நெட்வொர்க்கில் சேர்த்து வருகிறது. புதிய வாடிக்கையாளர்களை BSNL சேர்க்கும் அதே வேளையில், Jio, Airtel, Vi போன்ற நிறுவனங்கள் கொத்துக்கொத்தாக வாடிக்கையாளர்களை இழந்து வருகின்றனர்.

இது 20-20 மேட்ச் இல்லை.. BSNL-ன் 26-26 பிளான்.. Jio, Airtel, Vi அவுட்

Jio, Airtel, Vi-லாம் ஆள் அவுட் தான் போலயே.. BSNL-ன் 26-26 பிளான்:

இதன் காரணமாக தனியார் டெலிகாம் நிறுவனங்கள் பல புதிய திட்டங்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்ய முயன்று வருகின்றன. ஏறக்குறைய சொல்ல போனால், எதோ 20-20 கிரிக்கெட் மேட்ச் (20-20 cricket match) நடப்பது போல, கடுமையான போட்டி இப்போது டெலிகாம் துறையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆடுகளத்தில் தனித்து நின்று மக்களை கவரும் நோக்கத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது 26-26 பிளானை (BSNL 26-26 Plan) அறிமுகம் செய்துள்ளது.

என்னது 26-26 பிளான்-ஆ? அப்படி என்றால் என்ன? இந்த திட்டத்தின் விலை வெறும் 26 ரூபாய் தானா? இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன? என்று பல கேள்விகள் உங்களுக்குள் எழுந்திருக்கும். BSNL அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை (BSNL prepaid plan) பற்றிய முழு விபரங்களை இப்போது பார்க்கலாம். முதலில் இந்த திட்டத்தின் விலை 26 என்ற எண்ணுடன் தொடர்புடையது இல்லை என்பதை தெளிவுபடுத்திக்கொள்கிறோம்.

பிஎஸ்என்எல் ரூ. 153 பிளான் (BSNL Rs 153 Plan):

பிஎஸ்என்எல்-ன் இந்த 26-26 பிளான் 26 நாள் வேலிடிட்டி மற்றும் 26GB டேட்டா நன்மையுடன் தொடர்புடையது. இந்த பிளானை பிஎஸ்என்எல் நிறுவனம் BSNL Rs 153 Plan என்ற பெயருடன் பட்டியலிட்டுள்ளது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை (unlimited voice calls), தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையுடன் மொத்தமாக 26GB டேட்டா நன்மையை 26 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது.

இந்த 26GB டேட்டா நன்மை முடிந்த பிறகு, இந்த திட்டத்தின் பயனர்கள் 40Kbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா நன்மையை (unlimited data benefits) பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். இது தவிர இந்த திட்டத்துடன் கூடுதல் நன்மையாக, பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes) + ஹார்டி கேம்ஸ் (Hardy Games) + அரினா கேம்ஸ் (Arena Games) +

கேம்ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell) + கேமியம் (Gameium) + லிசன் பாட்காஸ்ட் (Lystn Podocast) + ஜிங் மியூசிக் (Zing Music) + வாவ் என்டர்டெயின்மென்ட் (WOW Entertainment) போன்ற இலவச நன்மைகள் கிடைக்கிறது. வெறும் ரூ. 153 விலையில் இப்படி ஒரு திட்டத்தை வழங்கும் ஒரே நிறுவனமாக BSNL மட்டுமே திகழ்கிறது. இந்த திட்டம் தற்போது இந்திய மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 153 Plan Offers 26GB Data Unlimited Voice Calls 100 SMS For 26 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X