Home
News

BSNL போட்ட போடு.. மாசம் ரூ.130 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 2 ஜிபி டேட்டா.. எப்படிங்க முடியுது?

பிஎஸ்என்எல் சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்கள் 4ஜி சேவைக்கு ரெடியாக இருங்கள். தெலங்கானா மாநிலத்தில் 4ஜி சேவை தொடங்கப்பட்டுவிட்டது. அடுத்தது தமிழ்நாடாக இருக்கும் என்பதால், இப்போது, டேட்டா திட்டங்களிடையே கஸ்டமர்களின் கவனம் சென்றுள்ளது. ஏனென்றால், டேட்டாவுக்கு மட்டும் திட்டம், வாய்ஸ் கால்களுக்கு மட்டும் திட்டம் என்று பிஎஸ்என்எல்லில் கிடைக்கிறது. இப்போது, அடிமட்ட விலைக்கு கிடைக்கும் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் திட்டங்களை தெரிந்து கொள்ளலாம்.

முதலில் டேட்டா திட்டத்தை பார்த்துவிடலாம். ரூ.1515 மதிப்பில் பிஎஸ்என்எல் நிறுவனம் வருடாந்திர டேட்டா திட்டத்தை (Yearly Data Plan) கொடுக்கிறது. இந்த திட்டத்தின் மாத செலவானது மற்ற எந்தவொரு நிறுவனங்களும் கொடுக்க முடியாதபடி இருக்கிறது. அதாவது, மாதத்துக்கு ரூ.130 கூட இல்லாமல் வெறும் ரூ.126 விலைக்கு கிடைக்கிறது.

BSNL போட்ட போடு.. மாசம் ரூ.130 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி வருது!

இந்த விலைக்கு தினமும் 2 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இது பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கும் பொருந்தும். ஆகவே, 730 ஜிபி டேட்டாவை ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களால் கொடுக்க முடியாத விலைக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் வேறு சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. ஆகவே, 365 நாட்களுக்கு நாள்தோறும் 2 ஜிபி டேட்டாவை மட்டும் பயன்படுத்தலாம். இது ஓடிடி மற்றும் கேமிங் பிரியர்களுக்கு மலிவான விலையில் டேட்டா சலுகை கொடுக்கும் திட்டமாக இருக்கிறது. இப்படி டேட்டா மட்டும் கிடைப்பதை போல வாய்ஸ் கால்கள் மட்டும் கிடைக்கும் வருடாந்திர திட்டமும் இருக்கிறது.

இந்த திட்டத்தின் விலை டேட்டா திட்டத்தைவிட மலிவாக இருக்கிறது. அதாவது, அந்த திட்டம் ரூ.1515 விலைக்கு கிடைத்தால், இந்த பிஎஸ்என்எல் திட்டம் ரூ.1499 விலைக்கு கிடைக்கிறது. இந்த விலைக்கு ஏற்ப வேலிடிட்டி கொஞ்சம் குறைவாக இருக்கிறது. அதாவது, 336 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டியை இந்த ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) கஸ்டமர்களுக்கு கொடுக்கிறது.

ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்களை (National Roaming Voice Calls) இந்த ரூ.1499 திட்டத்தில் வருடம் முழுவதும் செய்து கொள்ளலாம். இந்த சலுகை மட்டுமே இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். இந்த வருடாந்திர வாய்ஸ் திட்டத்தில் (Yearly Voice Plan) டேட்டாவும், எஸ்எம்எஸ் (SMS) சலுகையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், டேட்டாவை மிகவும் எதிர்பார்க்க முடியாது. 24 ஜிபி டேட்டா மட்டுமே பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு கிடைக்கும். இது 336 நாட்களுக்கும் சேர்த்தே கொடுக்கப்படுகிறது. ஆனால், எஸ்எம்எஸ் சலுகைகள் அப்படி கிடையாது. தினமும் பயன்படுத்தும்படி கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, 336 நாட்களிலும் ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வீதம் செய்து கொள்ள கிடைக்கிறது.

எனவே, வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை இந்த திட்டத்தில் பெறலாம். முந்தைய திட்டத்தை போல இந்த திட்டத்துக்கு மாதம் எவ்வளவு செலவாகிறது என்பதை பார்த்தால், வெறும் ரூ.124 போதும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வருடம் முழுவதும் பெற்று கொள்ள முடிகிறது. ஆகவே, இந்த திட்டம் லாபம் கொண்டதாகும்.

இதேபோல பல்வேறு திட்டங்கள் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களுக்கு என்று தனித்தனியாக கிடைக்கின்றன. இதுபோன்ற திட்டங்கள் மற்ற நிறுவனங்களில் கிடைக்காது. ஆகவே, பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவைக்கு பிறகு இந்த திட்டங்கள் அனைத்தும் தனி கவனம் பெறுவது மட்டுமல்லாமல், ரீசார்ஜ் செய்வதில் அதிகமாகவும் இருக்கப் போதிறது என்பதில் சந்தேகமில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 1515 Prepaid Plan With 365 Days Validity 2GB Daliy Data Cheapest Yearly Data Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X