Home
News

வேற லெவல் BSNL.. இனி ரூ.1515 ப்ரீபெய்ட் திட்டம் போதும்.. 365 நாள் வேலிடிட்டி.. என்னென்ன நன்மைகள்?

ஜியோ (Jio) நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். அதுவும் மலிவு விலை திட்டங்களில் அதிக சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது இந்நிறுவனம். எனவே தான் பிஎஸ்என்எல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1515 திட்டம் ஆனது அதிக டேட்டா மற்றும் அதிக நாள் வேலிடிட்டி வழங்குகிறது. இப்போது பிஎஸ்என்எல் ரூ.1515 திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி குறித்து இங்கே பார்க்கலாம்.

வேற லெவல் BSNL.. இனி ரூ.1515 ப்ரீபெய்ட் திட்டம் போதும்..

பிஎஸ்என்எல் ரூ.1515 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1515 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 730ஜிபி டேட்டா கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ், அழைப்பு நன்மைகள் போன்றவை கிடைக்காது. அதாவது இது டேட்டா திட்டம் ஆகும். குறிப்பாக டேட்டா நன்மையை மட்டும் எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

ஒருவேளை வருடாந்திர திட்டம், அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ், டேட்டா போன்ற நன்மைகளை எதிர்பார்க்கும் பயனர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 மற்றும் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்வது நல்லது. இப்போது இந்த திட்டங்களில் கிடைக்கும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1499 Prepaid Plan) ஆனது முன்பு 336 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்கியது. ஆனால் இந்த திட்டத்திற்கு தற்போது வழங்கப்பட்ட சலுகை மூலம் 365 நாள் வேலிடிட்டி கிடைக்கும். கம்மி விலையில் 365 நாள் வேலிடிட்டி கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.

குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 24ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பான அன்லிமிடெட் அழைப்பு நன்மைகளை விரும்பும் பயனர்கள் இதை தேர்வு செய்வது நல்லது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan) ஆனது முன்பு 395 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்திற்கு வழங்கப்பட்ட சலுகை மூலம் 425 நாள் வேலிடிட்டி கிடைக்கும். மேலும் பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 850ஜிபி டேட்டா கிடைக்கும்.

வேற லெவல் BSNL.. இனி ரூ.1515 ப்ரீபெய்ட் திட்டம் போதும்..

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகைபிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா
தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.

4G நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் பணியில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதுவும் இந்நிறுவனம் வரும் ஜூன் 2025 க்குள் 1 லட்சம் 4G டவர்களை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்பு இந்நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 1515 prepaid plan offers 2GB data per day and 365 days validity: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X