Home
News

BSNL சிம் இருக்கா.. மாதம் ரூ.126-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. 2 ஜிபி டேட்டா.. ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் குஷி!

பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்களின் கஸ்டமர்களும் மூக்கில் விரல் வைக்கும்படி மாதத்துக்கு வெறும் ரூ.126 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த பிஎஸ்என்எல் வருடாந்திர திட்டத்தில் (BSNL Yearly Plan) என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன? இவ்வளவு மலிவான விலைக்கு எப்படி திட்டம் கிடைக்கிறது? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ 1515 திட்ட விவரங்கள் (BSNL Rs 1515 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Prepaid Plan) ஓடிடி மற்றும் டேட்டா பிரியர்களுக்கு ஏற்ப அதிகப்படியான டேட்டா மலிவான விலையில் கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இது திட்டத்தின் டேட்டா சலுகையாகும்.

BSNL சிம் இருக்கா.. மாதம் ரூ.126-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. 2 ஜிபி!

இதுபோக 24 ஜிபி டேட்டாவை கூடுதலாக கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, 365 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், மொத்தமாக 730 ஜிபி டேட்டாவை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் பெற்று கொள்ளலாம். 24 ஜிபி டேட்டா கூடுதலாக கிடைப்பதால், 754 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த விலைக்கு 754 ஜிபி டேட்டா மற்ற நிறுவனங்களில் கிடைக்காது.

இந்த டேட்டா சலுகைகள் போக பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு வழக்கமாக கிடைக்கும் ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) டேட்டா வருகிறது. அதாவது, நாளொன்றுக்கு கொடுக்கப்படும் 2 ஜிபி டேட்டா சலுகையானது, அன்றைய நாளில் முழுவதும் பயன்படுத்தி விட்டாலும், 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) சலுகை கொடுக்கப்படும். இதுவும் இதில் கிடைக்கிறது.

இந்த திட்டத்தின் விலை ரூ.1515ஆக இருக்கலாம், ஆனால், இதற்கான மாத செலவை கணக்கிட்டால், வெறும் ரூ.126 மட்டுமே தேவைப்படுகிறது. இந்த விலைக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை வேறு நிறுவனங்களில் நிச்சயம் எதிர்பார்க்க முடியாது. இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டாவை தவிர வேறு சலுகைகளை இருக்கிறதா என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இது முழுவதும் டேட்டா சலுகையை கொண்ட திட்டமாகும். ஆகவே, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் சலுகைகள் கிடைக்காது. அடிமட்ட விலைக்கு கிடைப்பதால், டேட்டா சலுகைகள் மட்டுமே கிடைக்கின்றன. இதேபோல வேலிடிட்டி மற்றும் இதைவிட மலிவான விலையில் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் கிடைக்கிறது.

ஆனால், தேவைக்கு ஏற்ப கொடுக்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளுங்கள். இந்த திட்டத்தின் விலை ரூ.1198ஆக இருக்கிறது. இந்த திட்டத்துக்கும் முந்தைய டேட்டா திட்டத்தை போலவே 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சலுகைகள் கட்டுப்பாடுகளுடன் கிடைக்கின்றன.

அதாவது, 12 மாதங்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டாலும், ஒவ்வொரு மாதத்துக்கும் 300 நிமிடங்கள் வாய்ஸ் கால்கள், 3 ஜிபி டேட்டா மற்றும் 30 எஸ்எம்எஸ்கள் சலுகை மட்டுமே கிடைக்கிறது. இப்படி 12 மாதங்களுக்கும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த குறிப்பிட்ட சலுகைகளை அந்த மாதத்தில் முன்கூட்டியே முடித்தால், அடுத்த மாதத்தில் இருந்து சலுகைகள் தொடரும்.

பிஎஸ்என்எல் நிறுவனமானது, மற்ற நிறுவனங்களில் எதிர்பார்க்க முடியாத அடிமட்ட விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை கொடுத்து, கஸ்டமர்களை அதிகரித்து வருகிறது. அதிலும் ஜூலை 3ஆம் தேதி டெலிகாம் கட்டணங்கள் உயர்ந்த போதும், பிஎஸ்என்எல்லில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால், அதற்கு பிறகு லட்சக்கணக்கான கஸ்டமர்கள் பிஎஸ்என்எல்லுக்கு மாற தொடங்கினர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 1515 Plan With 365 Days Validity 2GB Data Check Cheapest Yearly Plan For Rs 126 Monthly Cost
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X