Home
News

தூக்கி சாப்பிட்ட BSNL.. மாதம் ரூ.126 செலவு.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 2GB டேட்டா!

ஜியோ நிறுவனத்தையே தூக்கிசாப்பிடும் வகையில் மாதம் வெறும் ரூ.126 செலவில் 365 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா சலுகையை கொடுக்கிறது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். இந்த திட்டத்தையும் இதே சலுகைகளுடன் ஜியோவில் கிடைக்கும் திட்டத்தையும் ஒப்பிட்டு விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

டெலிகாம் (Telecom) மார்கெட்டில் அதிகப்படியான சலுகைகள் கொண்ட திட்டங்களை வழங்கி வரும் நிறுவனம் என்றால், நம்மில் பலருக்கு ஜியோ (Jio) மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால், அதற்கு நிகரான நம்பமுடியாத சலுகைகளை பிஎஸ்என்எல் நிறுவனம் கொடுத்து வருகிறது. இருப்பினும், டேட்டா வேகம் மற்றும் சிக்னல் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதால், அதன் திட்டங்களை பற்றி பலரும் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை.

தூக்கி சாப்பிட்ட BSNL.. மாதம் ரூ.126 செலவு.. 365 நாட்கள் வேலிடிட்டி!

சொல்லப்போனால், எந்தவொரு நிறுவனமும் வழங்கவே முடியாத விலையில் ஒரு 2 ஜிபி டேட்டா திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் வைத்திருக்கிறது. ஓடிடி, ஆன்லைன் கேமிங் பிரியர்களாக இருக்கும் டெலிகாம் வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற ஒரு மலிவு விலை திட்டம் கிடைக்கவே கிடைக்காது. இப்போது, இதன் சலுகைகளை பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ 1515 திட்ட விவரங்கள் (BSNL Rs 1515 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற எந்த சலுகைகளும் கொடுக்கப்படாது. முழுக்க முழுக்க டேட்டா சலுகை மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாள்தோறும் 2 ஜிபி டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம்.

அதோடு 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 730 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த 2 ஜிபி டேட்டாவை முற்றிலும் பயன்படுத்தி விட்டாலும், 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. அடுத்த நாள் மீண்டும் டேட்டா வேகம் கிடைத்துவிடும்.

தூக்கி சாப்பிட்ட BSNL.. மாதம் ரூ.126 செலவு.. 365 நாட்கள் வேலிடிட்டி!

இதுவொரு டேட்டா வவுச்சர் (DATA Vouchers) திட்டம் என்பதால், வாய்ஸ் கால்களுக்காக நீங்கள் பேஸ் ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டத்தை (Base Active Prepaid Plan) வைத்து கொள்ள வேண்டும். இந்த திட்டத்துக்கான 30 நாட்களுக்கான செலவை பார்த்தால், வெறும் ரூ. 126 மட்டுமே தேவைப்படுகிறது. ஆகவே, 60 ஜிபி டேட்டா கிடைப்பது தெரிகிறது.

இதே 365 நாட்கள் வேலிடிட்டி சலுகையுடன் ஜியோவிலும் (Jio) ஒரு டேட்டா வவுச்சர் திட்டம் இருக்கிறது. இதன் சலுகைகளும் கிட்டத்தட்ட பிஎஸ்என்எல் ரூ 1515 திட்டத்தைப் போலவே இருக்கிறது. ஆகவே, இதன் முழு சலுகைகளையும் பாரத்துவிட்டு, அதன்பின் இரண்டு திட்டங்களையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.

ஜியோ ரூ 2878 திட்ட விவரங்கள் (Jio Rs 2878 Plan Details): இந்த திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 730 ஜிபி டேட்டா சலுகை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த தினசரி டேட்டா 2 ஜிபியை முழுவதும் பயன்படுத்தினாலும், ஃபேர் யூசேஜ் பாலிசியின் கீழ் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும்.

எந்த திட்டம் பெஸ்ட்? இரண்டு திட்டங்களும் ஒவ்வொரு விதத்தில் பிரத்யேக சலுகைகளை கொண்டுள்ளது. இருப்பினும், பிஎஸ்என்எல் திட்டத்தின் விலை ஜியோவைவிட கிட்டத்தட்ட 60 சதவீதம் மலிவாக கிடைக்கிறது. அதேபோல ஜியோவில் 4ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுவதால், பிஎஸ்என்எல்லைவிட அதிகப்படியான வேகம் கொடுக்கப்படுகிறது.

தூக்கி சாப்பிட்ட BSNL.. மாதம் ரூ.126 செலவு.. 365 நாட்கள் வேலிடிட்டி!

அதுவே 365 நாட்களுக்கு சிம் ஆக்டிக் சலுகையில் எது பெஸ்ட் என்று பார்த்தால், பிஎஸ்என்எல் திட்டமே நல்ல தேர்வாக இருக்கும். இப்படி விலை மற்றும் சிம் ஆக்டிக் சலுகையில் பிஎஸ்என்எல் ரூ 1515 திட்டமே அசத்தலான சலுகைகளை கொண்டிருக்கிறது. இதுபோன்ற டெலிகாம் செய்திகளை தெரிந்து கொள்ள எங்களை பின்தொடருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 1515 Plan With 2GB Daily Data 365 Days Validity Here One Year Plan Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X