BSNL-க்கு கும்பிடு.. மாசம் ரூ.126-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. அடிமட்ட ரேட்டில் 2 ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்?
முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) மட்டுமல்லாமல் ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற எந்தவொரு நிறுவனங்களும் கொடுக்க முடியாத சலுகைகளை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கொடுத்து வருகிறது. மாதத்துக்கு வெறும் ரூ.126 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட டேட்டா திட்டத்தையும், ரூ.99 செலவில் தேவைக்கேற்ப வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை கொடுக்கும் திட்டத்தையும் வழங்குகிறது. இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களின் (Prepaid Plans) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
பிஎஸ்என்எல் ரூ 1515 திட்ட விவரங்கள் (BSNL Rs 1515 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Prepaid Plan) வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகையை எதிர்பார்க்க முடியாது. தினசரி டேட்டா (Daily Data) சலுகை மட்டுமே கிடைக்கும். ஆகவே, ஓடிடி மற்றும் கேமிங் பிரியர்களுக்கு இந்த திட்டம் பக்காவாக இருக்கும்.

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா (Fair Usage Policy Data) கிடைக்கும். இந்த ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டாவை 2 ஜிபிக்கு பிறகு பயன்படுத்தலாம். ஆகவே, அன்லிமிடெட் டேட்டா தொடர்ந்து கிடைக்கும். இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
ஆகவே, 2 ஜிபி வீதம் மொத்தமாக 730 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த டேட்டா சலுகை மட்டுமல்லாமல், 24 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. இதை திட்டத்தின் முதல் 24 நாட்களுக்குள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆகவே, 754 ஜிபி டேட்டாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. இது மிகவும் மலிவான விலை நிர்ணயமாகும்.
ஏனென்றால், இந்த திட்டத்துக்கான மாத செலவு ரூ.126ஆக மட்டுமே இருக்கிறது. இந்த விலைக்கு 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் 24 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கிறது. இந்த விலைக்கு மற்ற நிறுவனங்களில் டேட்டா திட்டம் கிடையாது. பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தொடங்கப்பட்ட பிறகு இந்த திட்டம் பிஎஸ்என்எல் கஸ்டமர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெறலாம்.
இதேபோல மலிவான விலையில் வாய்ஸ் கால்கள் சலுகையை கொடுக்கும் திட்டம் வேண்டுமானால், ரூ 1198 விலையில் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. ஆனால், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்காது. இருப்பினும், மாதந்தோறும் சலுகைகள் பிரித்து கொடுக்கப்படும். கூடவே, டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளும் கொடுக்கப்படும்.
பிஎஸ்என்எல் ரூ 1198 திட்ட விவரங்கள் (BSNL Rs 1198 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளும்படி வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் பேக் செய்யப்பட்டுள்ளன.
அதாவது, 300 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்கள், 3 ஜிபி டேட்டா மற்றும் 30 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த சலுகைகள் ஒவ்வொரு மாதத்துக்கும் கொடுக்கப்படும். ஆகவே, 12 மாதங்களில் ஒவ்வொரு மாதத்துக்கும் 300 நிமிடங்கள் வாய்ஸ் கால்கள், 3 ஜிபி டேட்டா மற்றும் 30 எஸ்எம்எஸ் சலுகையை பெற்று கொள்ளலாம். இது லாபகரமாக இருக்கிறது.
இந்த திட்டத்துக்கு மாதம் எவ்வளவு செலவாகிறது என்று பார்த்தால், வெறும் ரூ 99 மட்டுமே தேவைப்படுகிறது. இதற்கேற்ப சலுகைகளும் இருக்கின்றன. ஒருவேளை மாதத்துக்கு ஒதுக்கப்பட்ட சலுகைகளை முன்கூட்டியே பயன்படுத்திவிட்டால், அடுத்த மாதம் வரும் வரையில் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








