Home
News

அடிச்சு தூக்கும் பிஎஸ்என்எல்.. மாதம் ரூ.126 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 2GB டெய்லி டேட்டா!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ரூ.2,500 முதல் ரூ.3,000 மதிப்பிலான திட்டங்களில் கொடுக்கும் சலுகைகளை பாதிக்குப்பாதி விலையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

பிஎஸ்என்எல் ரூ 1515 திட்ட விவரங்கள் (BSNL Rs 1515 Plan Details): இந்த திட்டத்தில் முழுக்க முழுக்க அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) சலுகை மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆகவே, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் ஓடிடி சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. ஒரு வருடத்துக்கு தடையில்லா டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்கள், இந்த திட்டத்தை தேர்வு செய்துகொள்ளலாம்.

மாதம் ரூ.126 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 2GB டெய்லி டேட்டா!

ஏனென்றால், இந்த திட்டத்தில் அதிகப்படியான டேட்டா சலுகை மற்றும் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவை 365 நாட்களுக்கு எடுத்து கொண்டால், மொத்தமாக 730 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

இந்த தினசரி டேட்டா 2 ஜிபியை முழுவதும் பயன்படுத்திவிட்டாலும், 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சேவை தொடர்ந்து வழங்கப்படுகிறது. அதன்பின்பு, அடுத்த நாள் மீண்டும் டேட்டா வேகம் அதிகரித்துவிடும். இந்த திட்டத்துக்கான மாதாந்திர செலவை பார்த்தால், வெறும் ரூ.126 மட்டுமே தேவைப்படுகிறது.

அதாவது, வெறும் ரூ.126 பட்ஜெட்டுக்கு 60 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, எப்படி பார்த்தாலும், இந்த டேட்டா திட்டம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த நன்மை தரக்கூடிய திட்டமாகவே இருக்கிறது. இதேபோன்று டேட்டா மற்றும் வேலிடிட்டியோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையும் வேண்டும் என்றால, ரூ.2,399 விலையில் கிடைக்கும் திட்டத்தை தேர்வு செய்யலாம்.

மாதம் ரூ.126 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 2GB டெய்லி டேட்டா!

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள், டேட்டா மட்டுமல்லாமல், ஓடிடி (OTT) சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முழு விவரங்களையும் இப்போது பார்ப்போம். இந்த பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டத்தை (BSNL Rs 2399 Plan) ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 730 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. மேலும், ஈராஸ் நவ் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் லோக்துன் கன்டென்ட் சப்ஸ்கிரிப்சன் வழங்கப்படுகிறது.

இந்த சலுகைகள் முதல் 30 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதுபோக பிஆர்பிடி (PRBT) சலுகையும் 30 நாட்களுக்கு கிடைக்கிறது. இப்படி ஏராளமான சலுகைகள் இந்த திட்டத்தில் இருக்கிறது. ஒருவேளை உங்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் போதும் என்றால், வெறும் ரூ.228 விலையில் பக்காவான ப்ரீபெய்ட் திட்டம் ஒன்று இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 228 திட்ட விவரங்கள் (BSNL Rs 228 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் என்று அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை கொடுக்கப்படுகிறது.

அதோடு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த 2 ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்தினாலும், 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதோடு ரூ.10 மதிப்பிலான டால்க் வேல்யூ (Talk Value)வழங்கப்படுகிறது.

மாதம் ரூ.126 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 2GB டெய்லி டேட்டா!

இந்த சலுகைகள் போக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை மற்ற டெலிகாம் நிறுவனங்களோடு ஒப்பிட்டு பார்த்தால், மிகுந்த லாபம் தரக்கூடியதாகவே இருக்கின்றன. இதுபோன்ற டெலிகாம் செய்திகளை தெரிந்துகொள்ள கிஸ்பாட் சேனலை பின் தொடருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 1515 Plan Offer 365 Days Validity 2GB Daily Data 40 Kbps FUP Limit Check Data Vouchers Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X