Home
News

இறங்கி அடித்த பிஎஸ்என்எல்.. மாதத்துக்கு ரூ.126 போதும்.. 365 நாட்களுக்கு வேலிடிட்டி.. அன்லிமிடெட் டேட்டா!

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களில் ஓடிடி, கேமிங் பிரியர்களுக்காகவே பிரத்யேகமான டேட்டா சலுகைகளை கொண்ட திட்டமாக பிஎஸ்என்எல் ரூ 1515 பிளான் (BSNL Rs 1515 Plan) இருக்கிறது. மாதத்துக்கு ரூ.126 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டியோடு அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

டெலிகாம் (Telecom) வாடிக்கையாளர்களிடையே அதிகரித்து வரும் ஓடிடி மற்றும் ஆன்லைன் கேமிங் பயன்பாடானது, ப்ரீபெய்ட் (Prepaid) மற்றும் போஸ்ட்பெய்ட் (Postpaid) திட்டங்களில் அதிக டேட்டா சலுகைகளை வழங்க காரணமாக அமைந்திருக்கிறது. இதனாலேயே, நாட்டின் மிகப்பெரும் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகியவற்றின் திட்டங்களில் டேட்டாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

மாதத்துக்கு ரூ.126 போதும்.. ஒருவருட வேலிடிட்டி.. அன்லிமிடெட் டேட்டா!

இவற்றில் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களே மிகுந்த சலுகை கொண்டவையாக இருக்கின்றன. அதாவது, மாதாந்திர பிளானுக்கு செலவிடும் தொகையை, ஒரு ஆண்டுக்கு கூட்டிப்பார்த்தால், அது வருடாந்திர பிளானின் செலவைவிட அதிகமாக இருக்கும். ஆகவே, 12 மாதங்களுக்கும் சேர்த்து ஒரே ரீசார்ஜ் செய்துகொண்டால், நல்ல லாபம் கிடைக்கும்.

இதில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற டேட்டா திட்டமாக ரூ 1515 பிளான் இருக்கிறது. ஒரேவொரு முறை ரீசார்ஜ் செய்து விட்டால் போதும், ஆண்டுதோறும் டேட்டா சலுகையை பெற்றுக் கொள்ள முடியும். இந்த திட்டத்தின் முழு சலுகைகள் குறித்து இப்போது தெரிந்து கொள்வோம்.

பிஎஸ்என்எல் ரூ 1515 பிளான் விவரங்கள் (BSNL Rs 1515 Plan Details): இந்த திட்டத்தில் முழுக்க முழுக்க டேட்டா சலுகை மட்டுமே கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் கிடைக்காது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படும்.

இந்த நாட்களில், தினந்தோறும் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆகவே, மொத்தமாக உங்களுக்கு 730 ஜிபி டேட்டா ஒதுக்கப்படுகிறது. இந்த டேட்டாவை ஹை-ஸ்பீடில் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதேவேளையில், 2 ஜிபியை முற்றிலும் பயன்படுத்தினாலும், 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டாவை பயன்படுத்தலாம்.

ஆகவே, அன்லிமிடெட் இன்டர்நெட் சேவையை இந்த திட்டம் வழங்குகிறது. இதோடு நீங்கள் பேஸ் ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டத்தை (Base Active Prepaid Plan) ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்ளும் பட்சத்தில் டேட்டாவை பற்றிய கவலையே இருக்காது. இந்த திட்டத்துக்கு 365 நாட்களும் வேலிடிட்டி இருப்பதால், இன்கமிங் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கான வேலிடிட்டி தொடர்ந்து இருக்கும்.

ஒரு வேளை உங்களுக்கு டேட்டாவுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளும் வேண்டுமானால், பிஎஸ்என்எல் ரூ.1999 திட்டத்தை (BSNL Rs 1999 Plan) தேர்வு செய்து கொள்ளுங்கள். இந்த திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. அதோடு தினந்தோறும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கும்.

இந்த திட்டத்துக்கு தினசரி டேட்டா கணக்கீடு கிடையாது. மொத்தமாக 600 ஜிபி டேட்டா உங்களுக்கு கொடுக்கப்படும். இதை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த 600 ஜிபி டேட்டா முடிந்தாலும், 80 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும், முதல் 30 நாட்களுக்கு ஈராஸ் நவ் எண்டர்டெயின்மெண்ட் (Eros Now Entertainment) மற்றும் லோக்துன் கன்டென்ட் (Lokdhun Content) சப்ஸ்கிரிப்சன் வழங்கப்படும். இப்படி பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஓடிடி, கேமிங் மற்றும் இன்டர்நெட் அதிமாக தேவைப்படும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு, இந்த 2 திட்டங்களும் பொருத்தமானதாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 1515 Plan Comes With 365 Days Validity, 2GB Daily Data, 40 Kbps FUP Data Check One Year Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X