சைலெண்ட்டா செஞ்சிவிட்ட BSNL.. ரூ.1515-க்கு கிடைச்ச 365 நாட்கள் வேலிடிட்டி.. 2 ஜிபி டேட்டா.. இனிமே இது இல்ல!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தில் கிடைத்துவந்த மலிவு விலை வருடாந்திர திட்டம் சத்தமில்லாமல் தூக்கப்பட்டுள்ளது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகையை 365 நாட்களுக்கு பிஎஸ்என்எல் மட்டுமே கொடுத்துவந்தது. ஆனால், இப்போது இதை திரும்பப் பெற்றுள்ளது. இனிமேல் 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட டேட்டா திட்டம் மட்டுமே அதிக வேலிடிட்டி கொண்டாக இருக்கப் போகிறது.
டேட்டாவுக்கு தனி திட்டம், வாய்ஸ் கால்களுக்கு தனி திட்டம் மற்றும் காம்போ திட்டம் என்று பல்வேறு திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் வைத்துள்ளது. மற்ற நிறுவனங்களில் இதுபோல அதிக அளவிலான ஆப்ஷன்களை எதிர்பார்க்க முடியாது. இந்த வரிசையில் பிஎஸ்என்எல் ரூ.1515 விலை கொண்ட திட்டம், டேட்டா வவுச்சர்களின் கீழ் கிடைத்துவந்தது.

சொல்லப்போனால், அதிக வேலிடிட்டி கொண்ட டேட்டா ஒன்லி திட்டமாக (Data Only Data) இது இருந்தது. இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கிடைத்தது. இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்பட்டது.
ஆரம்பத்தில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்காமல் இருந்தது. இதனால், இவ்வளவு மலிவான விலைக்கு இந்த டேட்டா திட்டத்தை கொடுக்க முடிந்தது. நாளொன்றுக்கு வெறும் ரூ.4.15 செலவில் 2 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ள முடிந்தது. ஆனால், இப்போது பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன.
இதனால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த டேட்டா திட்டம் மூலம் பெரிதும் லாபத்தை கொடுக்க முடியாது என்பது தெரிகிறது. ஆகவே, இந்த ரூ.1515 திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் நீக்கிவிட்டது. இனிமேல் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட டேட்டா ஒன்லி திட்டம் பிஎஸ்என்எல்லில் கிடைக்காது. 60 நாட்கள் வேலிடிட்டியே அதிகபட்சமாக இருக்கிறது.
அதேபோல 1 நாட்கள் வேலிடிட்டியில் இருந்து ஆரம்ப விலை டேட்டா திட்டம் தொடங்குகிறது. மொத்தமாக 5 டேட்டா திட்டங்கள் மட்டுமே இப்போது கிடைக்கின்றன. இந்த டேட்டா திட்டங்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். முதலாவது வெறும் ரூ.16 விலையில் இருந்து டேட்டா திட்டம் தொடங்குகிறது.
இந்த திட்டத்துக்கு 1 நாள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. 2 ஜிபி டேட்டா மற்றும் அந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையை கொடுக்கிறது. 2ஆவது திட்டம் ரூ.58 விலைக்கு கிடைக்கிறது. இதில் 7 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் 8 ஜிபி டேட்டாவை லம்ப்-சம் முறையில் பெற்று கொள்ளலாம்.
இது தினசரி டேட்டா கிடையாது. ஆகவே, இது முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். மூன்றாவதாக பிஎஸ்என்எல் ரூ.105 டேட்டா திட்டம் கிடைக்கிறது. இதில் மொத்தமாக 20 ஜிபி டேட்டா கிடைக்கும். முந்தைய திட்டத்தை போலவே 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. இதற்கும் 7 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
நான்காவது திட்டம் ரூ.198 விலைக்கு கிடைக்கிறது. இதிலும் தினசரி டேட்டா கிடைக்காது. மொத்தமாக 40 ஜிபி டேட்டா கிடைக்கும். ஆனால், இதற்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இறுதியாக பிஎஸ்என்எல் ரூ.411 திட்டம் இருக்கிறது. இதற்கு 60 நாட்கள் வேலிடிட்டியில் 100 ஜிபி டேட்டா கிடைக்கும். 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








