Home
News

தம்பி Jio ஓரம்போ.. அண்ணே BSNL இருக்கேன்.. மாதம் ரூ.120 போதும்.. 1 வருடம் 2GB டேட்டா.. வாய்ஸ்.. SMS நன்மை..

இந்தியாவில் மலிவான தொலைத்தொடர்பு தீர்வுகளைத் தேடுபவர்களுக்கு, பிஎஸ்என்எல் (BSNL) ஒரு வலுவான போட்டியாளராகத் திகழ்கிறது. ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), வோடபோன் ஐடியா (Vodafone Idea), ஏர்டெல் (Airtel) போன்ற தனியார் நிறுவனங்களின் விலைகளை விட BSNL கணிசமான குறைந்த விலை திட்டங்களை வழங்குகிறது. மாதத்திற்கு வெறும் ரூ. 126 என்ற தொடக்க விலையில், BSNL பயனர்கள், ஒவ்வொரு நாளும் 2GB டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் உள்ளிட்ட ஏராளமான நன்மைகளை அனுபவிக்க முடியும். இது என்ன திட்டம் என்பதை தெளிவாக பார்க்கலாம்.

மலிவு விலையில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் பல்வேறு வருடாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை BSNL நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில், பிஎஸ்என்எல் ரூ. 1515 திட்டம் (BSNL Rs 1515 Plan) ஒரு சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. இது 1 வருட செல்லுபடியாகும் வேலிடிட்டி காலத்துடன் வருகிறது. இத்திட்டம், 2 ஜிபி டேட்டா நன்மை உடன் ஒரு வருடத்திற்கு மொத்தம் 720GB டேட்டா நன்மையை வழங்குகிறது.

தம்பி Jio ஓரம்போ.. அண்ணே BSNL இருக்கேன்.. மாதம் ரூ.120 போதும்..

இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (Unlimited voice calls) அழைப்பு நன்மை மற்றும் தினசரி 100 இலவச எஸ்.எம்.எஸ். (SMS) ஆகிய வசதிகளையும் வழங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்குத் தேவையான அனைத்தும் ஒரே திட்டத்தில் எந்தவித தடையுமின்றி 1 வருடத்திற்கு தடையில்லாமல் (BSNL 1 year validity plan ) கிடைப்பதை இந்த திட்டம் உறுதி செய்கிறது.

மதிப்பு நிறைந்த தயாரிப்புகளின் போர்ட்ஃபோலியோவில் மேலும் சேர்க்கும் வகையில், 336 நாட்கள் செல்லுபடியாகும் பிஎஸ்என்எல் ரூ. 1,499 திட்டத்தையும் (BSNL Rs 1499 Plan) கொண்டுள்ளது. இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு மொத்தம் 24GB டேட்டா நன்மையை ஒதுக்குகிறது. இதோடு, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ். நன்மை ஆகியவை இதில் அடக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு திட்டங்களும் குறிப்பிடத்தக்க அம்சம், உயர் வேக தரவு வரம்பு முடிந்த பிறகும் 40Kbps வேகத்தில் தொடர்ந்து இணைய அணுகலை வழங்குவது. பயனர்கள் தொடர்ந்து இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது. பிஎஸ்என்எல் இன் உத்தி, அத்தியாவசியங்களில் சமரசம் செய்யாமல், மலிவு விலையில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. BSNL ரூ. 1515 திட்டம் டேட்டா அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு ஏற்றது என்றால், BSNL ரூ. 1499 விருப்பம் குரல் தொடர்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு ஏற்றது.

பிஎஸ்என்எல் வழங்கும் இந்த இரண்டு திட்டத்தில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த திட்டங்களில் ஓ.டி.டி. (OTT) தளங்களுக்கான சந்தாக்கள் என்று எந்தவொரு இலவச சந்தா மற்றும் கூடுதல் இலவச நன்மைகளை பயனர்கள் பெறமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல்-ன் எளிமையான திட்டங்கள் தேவையற்ற கூடுதல் சேவைகள் இல்லாமல் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. இருபினும் முக்கியமான டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளில் எந்தவித குறையும் இல்லாமல் சாமர்த்தியமாக பார்த்துக்கொள்கிறது.பிஎஸ்என்எல்

Best Mobiles in India

English summary
BSNL Rs 1515 Plan 2GB Data Unlimited Calls 100 SMS For 1 Year BSNL Rs 1499 Plan 336 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X