ஓஹோ BSNL-ல இப்படிலாம் பிளான் இருக்கா? 40GB டேட்டானா சூப்பர் தானே.. யாருமே தரமுடியாத விலையில்.. கடுப்பில் Jio..
இந்திய அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது அதன் 2வது கட்ட ஆட்டத்தை துவங்கியுள்ளது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் திடீரென 25% வரை கடுமையான விலை ஏற்றத்தை அதன் ரீசார்ஜ் திட்டங்களின் மீது அமல்படுத்திய பிறகு, தனியார் வாடிக்கையாளர்கள் அனைவரும் கடுப்பில் பிஎஸ்என்எல் (BSNL) பக்கம் மாறத்துவங்கியுள்ளனர். இந்த வாய்ப்பை BSNL மிகச்சரியாக பயன்படுத்தி வருகிறது. இப்போது வரை சுமார் 5 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை BSNL பெற்றுள்ளது.
மிகவும் மலிவு விலையில் பல சிறப்பான நன்மைகள் கொண்ட பல வகையான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை பிஎஸ்என்எல் (BSNL Prepaid Recharge Plan) அறிமுகம் செய்து வருகிறது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) அல்லது விஐ (Vi) போன்ற தனியார் நிறுவனங்கள் வழங்க முடியாத விலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் திட்டங்களை வழங்கி மக்களை தனது வசம் ஈர்த்து வருகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 151 திட்டம் (BSNL Rs 151 Plan):
அப்படி சமீபத்தில், பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த புதிய ப்ரீபெய்ட் திட்டம் தான் பிஎஸ்என்எல் ரூ. 151 திட்டம் (BSNL Rs 151 Plan). இந்த திட்டம் வெறும் 150 ரூபாய் விலைக்குள் அட்டகாசமான நன்மையை வழங்குகிறது. ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்கள், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இத்தகைய திட்டங்களை கண்டு கடுப்பில் இருக்கின்றனர். இந்த புதிய திட்டம் என்ன நன்மையை வழங்குகிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ. 151 திட்டம் (BSNL Rs 151 Plan) ஆடியோ வாய்ஸ் கால்ஸ் நன்மை இல்லதாக, அல்லது டால்க் டைம் குறைவாக இருக்கும் ரீசார்ஜ் திட்டங்களை தேர்வு செய்த வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமானது. ஏனெனில், இது ஒரு டேட்டா ஒன்லி திடமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆம், இந்த பிஎஸ்என்எல் ரூ. 151 திட்டம் (BSNL Rs 151 Plan) திட்டம் ஒரு டேட்டா வவுச்சர் திட்டமாகும்.
ஒரே BSNL பிளானில் 40GB டேட்டா நன்மை (BSNL 40GB Data Plan):
இந்த பிஎஸ்என்எல் ரூ. 151 திட்டம் (BSNL Rs 151 Plan) அதன் பயனர்களுக்கு மொத்தமாக 40GB டேட்டாவை வழங்குகிறது. இது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. அதாவது, பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கியுள்ள வேலிடிட்டியான 30 நாட்களுக்குள், நீங்கள் இந்த 40ஜிபி டேட்டாவை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இது தினசரி வரம்பு எதுவுமில்லாமல் வருகிறது என்பது கூடுதல் சிறப்பு.
பிஎஸ்என்எல் வழங்கும் தினசரி டேட்டா நன்மை கிடைக்கும் திட்டங்களை நீங்கள் தேர்வு செய்யும் பட்சத்தில் அதிகப்படியாக ஒரு நாளுக்கு 3ஜிபி டேட்டா மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், இந்த திட்டத்துடன் கிடைக்கும் 40ஜிபி டேட்டாவை நீங்கள் ஒரே நாளில் கூட முழுமையாக பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டத்துடன் கிடைக்கும் டேட்டா நன்மையை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். அது உங்கள் விருப்பமே.


Click it and Unblock the Notifications








