Home
News

பொங்கலோடு கேபிள் TV-க்கு கும்பிடு.. மாதம் ரூ.151 க்கு 450 TV சேனல், 25 ஓடிடி.. BSNL பொளேர்!

2026 தொடங்கியதுமே நாடு முழுவதுமான வோவைஃபை (VoWiFi) ஆதரவை அறிமுகம் செய்து பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் பட்டையை கிளப்பி உள்ளது. ஆனால் இந்த 2026 இல் 4ஜி, வோவைஃபை ஆகிய சேவைகளை மீறி, நாம் கவனிக்க வேண்டிய ஒரு சேவை உள்ளது.

அதுதான் பிஐடிவி (BiTV) சேவை 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யபட்ட இந்த சேவையை "கேபிள் டிவி கட்டர்" என்றே கூறலாம். அதாவது கேபிள் டிவி கனெக்ஷனை கட் செய்ய தூண்டும் சேவை என்று கூறலாம். ஏனென்றால் இது வெறும் ரூ.151 க்கு "வாய்ப்பிளக்க வைக்கும்" நன்மைகளை வழங்குகிறது.

பொங்கலோடு கேபிள் TV-க்கு கும்பிடு.. மாதம் ரூ.151 க்கு!

பிஐடிவி ரூ.151 பேக்கின் நன்மைகள்: இது 30 நாட்கள் செல்லுபடியாகும். இந்த காலகட்டத்தில் 450 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள், சோனி லைவ் (SonyLiv), ஷீமாரூ (ShemarooMe), லயன்ஸ் கேட் பிளே (LIONSGATEPLAY), சன் நெக்ஸ்ட் (Sun NXT) ஆகிய ஓடிடி தளங்களுக்கான அணுகல்கள் கிடைக்கும்.

கூடவே டோலிவுட் பிளே (Dollywood Play), ஈடிவி வின் (ETV Win), ஆஹா தமிழ் (Aha Tamil) உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கான அணுகல்களும் கிடைக்கும். இது பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் மிகவும் மலிவான ஆட்-ஆன் பேக் ஆகும். அதாவது இது ஏற்கனவே ஆக்டிவ் ஆக உள்ள மெயின் பிளானுக்கு மேல் ரீசார்ஜ் செய்யப்பட வேண்டும். இதே பிஐடிவி சேவையின் கீழ் ரூ.28 மற்றும் ரூ.29 மதிப்புக்கு பேக்களும் உள்ளன.

ரூ.251 உடனும் பிஐடிவி கிடைக்கும்: சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் ஸ்பெஷல் ரீசார்ஜ் ஆன ரூ.251-ன் செல்லுபடியாகும் காலத்தை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நன்மைகளை பொறுத்தவரை பிஎஸ்என்எல்-ன் ரூ.251 திட்டமானது 30 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த 30 நாட்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் மொத்தமாக 100 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகள் கிடைக்கும்.

சுவாரசியமாக ரூ.251 திட்டத்தின் கீழ் பிஐடிவி (BiTV) இலவச சந்தாவும் கிடைக்கும். அறியாதோர்களுக்கு பிஐடிவி என்பது இந்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இன்டர்நெட் டிவி சேவை (internet TV service) ஆகும்.

பிஎஸ்என்எல் வோவைஃபை: பிஎஸ்என்எல் அதன் மொபைல் சந்தாதாரர்களுக்கு, கனெக்டிவிட்டி தொடர்பான ஒரு பெரிய மேம்படுத்தலை வழங்கியுள்ளது. அது வோவைஃபை (VoWiFi) என்கிற வாய்ஸ் ஓவர் வைஃபை காலிங் (Voice over Wi-Fi calling) செய்வதற்கான ஆதரவு ஆகும். தற்போது இந்த வசதி இது நாடு முழுவதும் அணுக கிடைக்கிறது.

அதாவது வைஃபை இணைப்பு கிடைக்கும் வரை, பலவீனமான அல்லது மொபைல் நெட்வொர்க் இல்லாத பகுதிகளில் இருந்தாலும் கூட, பயனர்களால் இப்போது வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்-ஐ மேற்கொள்ளலாம் மற்றும் பெறலாம். வோவைஃபை அல்லது வைஃபை காலிங் என்பது "பாரம்பரியமான" மொபைல் டவர்களை (Mobile Towers) மட்டுமே நம்புவதற்கு பதிலாக, வாய்ஸ் கால்கள் மற்றும் மெசேஜ்களை அனுப்ப வைஃபை நெட்வொர்க்கை பயன்படுத்த அனுமதிக்கிறது.

இந்த தொழில்நுட்பம் ஒரு ஐபி- அடிப்படையிலான அமைப்பு (IP based system - IMS) மூலம் செயல்படுகிறது, இது வைஃபை மற்றும் மொபைல் சிக்னல்களுக்கு இடையில் தடையின்றி கைமாறுகிறது, உங்கள் அழைப்பு தரம் (call quality) தெளிவாகவும், நிலையானதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.

இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் ஸ்மார்ட்போன் வைஃபை காலிங்கை ஆதரிக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். மிக சமீபத்திய ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் மாடல்கள் இந்த ஆதரவை ஏற்கனவே கொண்டுள்ளன. உங்கள் ஹோம் பிராட்பேண்ட், ஒரு கஃபே ஹாட்ஸ்பாட் அல்லது பிஎஸ்என்எல்லின் சொந்த பாரத் ஃபைபர் சேவை என எந்த வைஃபை நெட்வொர்க்குடனும் உங்கள் ஸ்மார்ட்போனை இணைக்கவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 151 BiTV Pack With 450 Live TV Channels OTT Easily Cut Your Cable TV Connection
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X