பிஎஸ்என்எல் ரூ1499 மற்றும் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டங்கள்.. என்னென்ன நன்மைகள்? எது சிறந்தது? இதோ விவரம்..
தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். அதுவும் இந்நிறுவனம் கம்மி பட்ஜெட்டில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. எனவே தான் பிஎஸ்என்எல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். பிஎஸ்என்எல் நிறுவனம் பட்ஜெட் விலையில் 300 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி தரும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. அதாவது ரூ.1449 மற்றும் ரூ.1999 என இரண்டு திட்டங்களை வைத்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் என்னென்ன நன்மைகள் வழங்குகின்றன மற்றும் எதை தேர்வு செய்வது நல்லது என்பதை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1499 Prepaid Plan) 300 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் 32ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது.
அதேபோல் இந்த பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது ஆனால் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் இந்த திட்டத்தில் 30ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். இந்த திட்டத்தை தேர்வு செய்பவர்கள் கூடுதல் டேட்டா தேவைப்பட்டால் டேட்டா வவுச்சர்களை தேர்வு செய்யலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1999 Prepaid Plan) தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 330 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 495ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும். அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
எது சிறந்தது
பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தை விட ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் அதிக டேட்டா மற்றும் அதிக நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. ஒருவேளை கம்மி பட்ஜெட்டில் தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் 70 நாட்கள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்யலாம்.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தபிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications
