Home
News

பொங்கி எழுந்த BSNL.. மாதாந்திரம் ரூ.125 க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ், SMS, 24GB டேட்டா!

பிஎஸ்என்எல் (BSNL) சிம் கார்டு வைத்து இருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் உள்ளது. அது மாதாந்திரம் வெறும் ரூ.125 செலவில் 365 நாட்களுக்கு வேலிடிட்டிவழங்கும் ஒரு தரமான சிம் ஆக்டிவ் பிளான் (SIM Active Plan) ஆகும். இந்த திட்டத்தின் விலை என்ன? இதன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

அதென்ன திட்டம்? நாம் இங்கே விரிவாக பார்க்க போவது பிஎஸ்என்எல்-ன் ரூ 1499 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றித்தான். அதிக செலவு செய்யாமல் தங்கள் சிம் கார்டை நீண்ட காலத்திற்கு ஆக்டிவ் ஆக வைத்திருக்க விரும்பும் பயனர்களுக்கு, இதைவிட ஒரு பெஸ்ட் ஆப்ஷன் கிடையாது என்றே கூறலாம்.

பொங்கி எழுந்த BSNL.. மாதாந்திரம் ரூ.125 க்கு 365 நாட்கள் வேலிடிட்டி!

இதை "பெஸ்ட் ஆப்ஷன்" என்று கூறுவதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. முதல் காரணம் - இது ஒரு பான்-இந்தியாதிட்டமாகும். அதாவது குறிப்பிட்ட சில டெலிகாம் சர்க்கிள்களில் மட்டும் கிடைக்காமல், இந்தியா முழுவதும் உள்ள பயனர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஒரு திட்டமாகும்

இரண்டாவது காரணம் - இது மாதாந்திரம் ரூ.125 செலவில் 356 நாட்களுக்கு அல்லது 1 ஆண்டு முழுவதுமான நன்மைகளை வழங்குகிறது. தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தத்தம் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் கூட பிஎஸ்என்எல் தனது கட்டணத்தை உயர்த்தவில்லை.

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா (விஐ) போன்ற தனியார் தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்கள் வழங்கும் 1 ஆண்டு வேலிடிட்டி திட்டங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால், பிஎஸ்என்எல்-ன் ரூ.1499 திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள் எவ்வளவு மதிப்புமிக்கவைகள் என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? பிஎஸ்என்எல்-ன் இந்த ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் 24ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளுடன் வருகிறது. இந்த திட்டத்தில் தொகுக்கப்பட்ட டேட்டா என எதுவும் இல்லை.

அதாவது நீங்கள் எப்யூபி (FUP) டேட்டா லிமிட்டை பயன்படுத்தி விட்டால், மேலதிக டேட்டா தேவைக்கு டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் வாய்ஸ் கால்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ரூ.1,499-ன் கீழ் எஸ்எம்எஸ் உடன் சேர்த்து உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்பு நன்மையானது ஆண்டு முழுவதும் அணுக கிடைக்கும்.

கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இதன்கீழ் ஹார்டி கேம்ஸ் (Hardy Games), சேலஞ்சர் அரேனா கேம்ஸ் (Challenger Arena Games), கேம்ஸ்ஆன் (Gameson), கேமியம் (Gameium), லிசன் பாட்காஸ்ட் (Lystn Podcast), ஸிங் ம்யூசிக் (Zing Music) மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் (BSNL Tunes) ஆகிய நன்மைகள் 365 நாட்களுக்கும் அணுக கிடைக்கும்.

ஒவ்வொரு நாளும் நிறைய டேட்டாவை அல்லது டெய்லி டேட்டாவை பயன்படுத்த விரும்பும் பயனர்களுக்கு பிஎஸ்என்எல்-ன் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நல்ல தேர்வாக இருக்காது. மாறாக வாய்ஸ் கால்கள் மற்றும் தங்கள் சிம் காரட்டை ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள விரும்பும் பயனர்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும்.

எனவே, உங்களிடம் இரண்டாவது சிம் கார்டு ஆக பிஎஸ்என்எல் இருந்தால் அல்லது உங்கள் வீட்டில் டேட்டாவை பயன்படுத்த விரும்பாத வயதான பெற்றோர்கள் இருந்தால் இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா போன்ற நிறுவனங்களிடம் 1 ஆண்டு திட்டங்கள் உள்ளன. ஆனால் அவைகள் எதுவுமே பிஎஸ்என்எல் அளவிற்கு மலிவானதாக இல்லை. ஒருவேளை திடீர் டேட்டா தேவைகள் ஏற்பாட்டாலும் கூட, பிஎஸ்என்எல் சேவையின் கீழ் மலிவான டேட்டா வவுச்சர்களும் உள்ளன, தேவைக்கு ஏற்ப அவைகளை ரீசார்ஜ் செய்து டேட்டா பலன்களை பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 1499 SIM Active Plan With 365 Days Validity Unlimited Voice Daily SMS 24GB Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X