Home
News

கம்மி பட்ஜெட்ல 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. டேட்டா.. அள்ளி தரும் BSNL.. 4ஜி எப்போ வரும்?

ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது பட்ஜெட் விலையில் அதிக நாள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா நன்மையை வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1515 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1515 Prepaid Plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.1515 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்மி பட்ஜெட்ல 365 நாட்கள் வேலிடிட்டி.. அள்ளி தரும் BSNL..

ஆனால் பிஎஸ்என்எல் ரூ.1515 ப்ரீபெய்ட் திட்டத்தில் எஸ்எம்எஸ், அழைப்பு நன்மைகள் போன்றவை கிடைக்காது. அதாவது இது ஒரு டேட்டா திட்டம் ஆகும். குறிப்பாக டேட்டா நன்மையை மட்டும் எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது மிகவும் நல்லது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1499 Prepaid Plan) ஆனது 336 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் 24ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது.

அதேபோல் இந்த பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பாக அதிக நாள் வேலிடிட்டி மற்றும் அழைப்பு நன்மைகளை மட்டும் எதிர்பார்க்கும் பிஎஸ்என்எல் பயனர்கள் இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் 4ஜி சேவையை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. தற்போது இந்நிறுவனம் 1 லட்சம் 4ஜி தளங்களை இணைக்கும் இலக்கை அடைய மிக அருகில் உள்ளது. அதாவது சமீபத்தில் வெளியான தகவலின்படி, 83,629 4ஜி டவர்களை பிஎஸ்என்எல் நிறுவியுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூன் மாதத்திற்கு முன் 1 லட்சம் டவர்கள் அமைக்கும் இலக்கு முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கூடிய விரைவில் அனைத்து பகுதிகளிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் இந்நிறுவனம் 1 லட்சம் 4G தளங்களை நிறுவிய பிறகு, 5G ஐ அறிமுகப்படுத்தவும் உள்ளது. 5ஜி சேவையை பொறுத்தவரை, பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே டெல்லியில் 5ஜி எஸ்ஏ-வை சோதிக்கத் திட்டமிட்டுள்ளது.

அதே நேரத்தில், டிசிஎஸ் உதவியுடன் தற்போதுள்ள 4ஜி தளங்களை 5ஜி-க்கு மேம்படுத்தும் பணிகளைச் செய்யவும் பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள 4ஜி சைட்களை ஒரு எளிய மென்பொருள் உந்துதலுடன் 5ஜி என்எஸ்ஏ-க்கு மேம்படுத்த முடியும் என்பதை டாடா குழுமம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் உள்நாட்டு 4ஜி-ஐ பயன்படுத்தும் ஒரே தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பிஎஸ்என்எல் மட்டுமே ஆகும். மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தத்தம் பயனர்களுக்கு 4ஜி-ஐ வழங்க வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியை நாடின. பாதுகாப்பு நிலைப்பாட்டிற்காகவும், சுயசார்பு கண்ணோட்டத்தாலும், 4ஜி வெளியீட்டிற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயப்படுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Bsnl Rs 1499, Rs 1515 prepaid plans offer Data, unlimited calling: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X