Home
News

BSNL போட்ட போடு.. மாதாந்திரம் ரூ.125 செலவில் 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 100 எஸ்எம்எஸ்கள்!

பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நிறுவனத்தில் மாதத்துக்கு ரூ.125 செலவில் 336 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் திட்டம் கிடைக்கிறது. இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி எஸ்எம்எஸ்கள் மற்றும் லம்ப்-சம் டேட்டா கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 1499 ரீசார்ஜ் திட்ட ஆஃபர் (BSNL Rs 1499 Recharge Plan Offer): இந்த ப்ரீபெய்டு திட்டத்தில் 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது, அதாவது மாதத்துக்கு 28 நாட்கள் வீதம் மொத்தம் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, மாதத்துக்கு வெறும் ரூ 125 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை பெற்றுக் கொள்ளலாம்.

BSNL போட்ட போடு.. மாதாந்திரம் ரூ.125 செலவில் 336 நாட்கள் வேலிடிட்டி!

இதுபோக உங்களுக்கு லம்ப்-சம் டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 336 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு மலிவான விலையில் வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் கிடைக்கும்.

இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் சலுகையும் வாரி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இது போன்ற அடிமட்ட விலை ப்ரீபெய்டு திட்டத்தில் லம்ப்-சம் எஸ்எம்எஸ் சலுகை மட்டுமே கிடைக்கும். ஆனால், இந்த திட்டத்துக்கு தினசரி எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வீதம் 336 நாட்களுக்கும் கிடைக்கிறது. இந்த சலுகைகளே பட்ஜெட்டுக்கு போதுமானதாக இருக்கிறது.

இருப்பினும், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் லம்ப்-சம் டேட்டா சலுகையும் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இதில் மொத்தமாக 24 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகும் உங்களுக்கு ஃபேர் யூசேஜ் பாலிசி சலுகையின் கீழ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். ஆனால் இது 40கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படும். இருப்பினும், இந்த சலுகை வரவேற்க வேண்டியது தான்.

ஏனென்றால், 24 ஜிபி டேட்டா முடிந்து போனாலும் உங்களுக்கு குறைவான வேகத்தில் தொடர்ந்து டேட்டா சலுகை கொடுக்கப்படும். ஆகவே, இந்த திட்டம் தரமான சலுகைகளையே கொடுத்துள்ளது. இந்த விலைக்கு ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தனியார் நிறுவனங்களில் திட்டங்கள் கிடையாது என்பதே உண்மையாகும். ஜியோவில் கிட்டத்தட்ட இருக்கிறது.

ஆனால், அது ஜியோபோன், ஜியோபோன் ப்ரைமா போன்ற கீபோர்டு போன்களை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த திட்டம் கஸ்டமர்களுக்கு நல்ல லாபத்துடன் கிடைக்கிறது. ஒருவேளை இதே போல அடிமட்ட விலையில் அதிக டேட்டா உடன் ப்ரீபெய்டு திட்டம் வேண்டுமானால் மற்றொரு திட்டம் இருக்கிறது.

இந்தத் திட்டத்தின் விலை ரூ 500 அதிகமாக இருக்கும். அதாவது முந்தைய திட்டம் ரூபாய் 1499 என்றால் இந்த திட்டம் ரூ 1999 விலைக்கு கிடைக்கிறது. ஆனால், அதற்கு ஏற்ப சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது சொல்லப்போனால், இந்த திட்டத்தின் விலையையும் மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவாகவே இருக்கிறது. இதன் சலுகைகளை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ 1999 ரீசார்ஜ் திட்ட ஆஃபர் (BSNL Rs 1999 Recharge Plan Offer): இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் முந்தைய திட்டத்தில் கிடைத்தது போலவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினசரி எஸ்எம்எஸ் கள் கிடைக்கின்றன. டேட்டாவும் லம்ப்-சம் முறையிலேயே கிடைக்கிறது ஆனால், அதிகப்படியான டேட்டா கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, மொத்தமாக 600 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுபோக 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதுவே இது முந்தைய திட்டத்தை விட கூடுதல் வேலிடியை கொடுத்து இருக்கிறது. 600 ஜிபி டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்திற்கு கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 1499 Recharge Plan Offer 336 Days Validity 24GB Data 40Kbps FUP Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X