Home
News

ஏழைக்கு ஏத்த BSNL.. மாதம் ரூ.149 க்கு 300 நாட்கள் வேலிடிட்டி.. 32 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் வருடாந்திர திட்டங்களானது, ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களைவிட மலிவான விலைக்கு கிடைக்கிறது. இதில் 300 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் மாதத்துக்கு வெறும் ரூ.149 விலைக்கு கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இந்த வருடாந்திர திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

மாதத்துக்கு ரூ.149 விலைக்கு கிடைக்கிறது என்றால், அதே விலைக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்று நினைக்க வேண்டாம். இந்த திட்டத்தின் விலை ரூ.1499 ஆக இருக்கிறது. இந்த விலைக்கு 300 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 30 நாட்கள் வீதம் 10 மாதங்களுக்கு வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம். ஒரு மாத செலவை கணக்கிட்டால் ரூ.149 மட்டுமே தேவைப்படுகிறது.

ஏழைக்கு ஏத்த BSNL.. மாதம் ரூ.149 க்கு 300 நாட்கள் வேலிடிட்டி!

பிஎஸ்என்எல் ரூ.1499 திட்ட விவரங்கள் (BSNL Rs 1499 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த விலைக்கு தினசரி டேட்டாவை எதிர்பார்க்க முடியாது. இந்த திட்டத்தில் மொத்தமாக 32 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது.

இந்த டேட்டாவானது வேலிடிட்டி முடிவதுக்கும் பொருந்தும். ஆகவே, இந்த டேட்டா முன்கூட்டியே பயன்படுத்தி முடித்தால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்த முடியும். இந்த டேட்டா போதாது என்றால், கூடுதல் டேட்டாவுக்கு டேட்டா வவுச்சர்களை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது. இதைவிட கூடுதல் டேட்டா வேண்டுமானால், பிஎஸ்என்எஸ் கஸ்டமர்களுக்கு பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டமானது சரியான தேர்வாக இருக்கும். இதில் தினசரிக்கு டேட்டா (Daily Data) கிடைக்கிறது. இதுபோக போஸ்ட் டேட்டாவும் (Post Data) வருகிறது.

பிஎஸ்என்எல் ரூ.1999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. இதுபோக 10 ஜிபி கூடுதல் டேட்டாவும் கிடைக்கிறது. இந்த பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 495 ஜிபி டேட்டா கிடைக்கும். 1.5 ஜிபி டேட்டா முடிந்தவுடன் 40 கேபிபிஎஸ் வேகத்தில் கிடைக்கும்.

இந்த திட்டத்தில் வேலிடிட்டி 330 நாட்களாக இருக்கிறது. மேலும், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை இந்த பிஎஸ்என்எல் ரூ.1999 திட்டம் கொடுத்து இருக்கிறது. முந்தைய திட்டத்தில் கிடைத்த 100 எஸ்எம்எஸ் சலுகையும் இந்த பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவில் 300 நாட்கள் அல்லது 330 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் கிடைக்காது. 365 நாட்கள் அல்லது 200 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களே இருக்கின்றன. இதில் தினசரி டேட்டாவுடன் வருடம் முழுவதும் வேலிடிட்டி கொடுத்தால், அந்த திட்டத்தின் விலை ரூ.3500 விலைக்கும் மேல் இருக்கும். ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2000 விலைக்குள் கிடைக்கிறது. ஆகவே, ஏழைகளுக்கு ஏற்ற திட்டங்களாக இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
BSNL Rs 1499 Plan With Unlimited Voice Calls 32GB Data 330 Days Validity 40Kbps Speed Post Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X