BSNL-க்கு சுக்ரதிசை.. கியூ கட்டுது SIM விற்பனை.. ரூ.124 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. Jio, Airtel கலக்கம்!
பிஎன்எஸ்எல்லுக்கு இனிமே சுக்ரதிசைதான் என்று வரும் சமூக வலைதளங்களில் வரும் மீம்கள் உண்மையாகிவிடும் போலயே என்று சொல்லும் அளவுக்கு டெலிகாம் கஸ்டமர்கள் கியூ கட்டி பிஎஸ்என்எல் (BSNL) சிம் கார்டு வாங்கி வருகிறார்கள். மாதாந்திரம் வெறும் ரூ.124 கொடுத்தால், 336 நாட்களுக்கு வேலிடிட்டி மட்டுமல்லாமல் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை பிஎஸ்என்எல் வாரி வழங்கினால், எந்தவொரு டெலிகாம் கஸ்டமர்களும் பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கத்தான் செய்வார்கள். இந்த திட்டத்தின் விவரங்கள் இதோ.
இதுவரை காணாத சிம் கார்டு விற்பனையை பிஎஸ்என்எல் நிறுவனம் பார்த்து வருகிறது. பல இடங்களில் கஸ்டமர்கள் கியூ கட்டி சிம் கார்டு வாங்கி செல்வதையும் பார்க்க முடிகிறது. இவ்வளவு நாள் அதிவேக டேட்டா சலுகையை எதிர்பார்த்த கஸ்டமர்கள், இப்போது ஓரளவு டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மலிவான விலையில் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு மாறிவிட்டனர்.

பிஎஸ்என்எல் ரூ 1499 திட்ட விவரங்கள் (BSNL Rs 1499 Plan Details): மலிவான விலையில் திட்டங்களை கொடுத்து ஒட்டுமொத்த கஸ்டமர்களையும் பிஎஸ்என்எல் நிறுவனம் பிடித்து வருகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளானது மற்ற டெலிகாம் நிறுவனங்களால் கொடுக்க முடியாத விலைக்கு இருக்கிறது.
ஆகவே, இந்த மலிவு விலை திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 336 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட ஒரு வருட வேலிடிட்டி போலத்தான். இந்த நாட்களில் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ள முடியும்.
அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் கொடுக்கப்படுகிறது. டேட்டாவை பொறுத்தவரையில், தினசரி சலுகையை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், இந்த திட்டமானது மாதத்துக்கு வெறும் ரூ.124 செலவிலேயே கிடைக்கிறது. ஆகவே, டேட்டாவில் கட்டுப்பாடுகளை பார்க்க முடிகிறது. இருப்பினும், 24 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுயை பெற்று கொள்ளலாம்.

இந்த டேட்டாவுக்கு தினசரி லிமிட் கிடையாது. 336 நாட்கள் வேலிடிட்டியில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், அதற்கு பிறகு டேட்டாவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல மிகவும் மலிவான விலையில் தினசரி டேட்டா கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறதா? என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு பின்வரும் திட்டம் சரியாக இருக்கும்.
இந்த திட்டமானது ரூ.2399 மதிப்பில் கிடைக்கிறது. இந்த திட்டம் சற்று கூடுதல் விலை போல தெரியலாம். ஆனால், 395 நாட்கள் வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். அதாவது, 13 மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகையை பயன்படுத்தலாம்.
மொத்தமாக 790 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. இதுபோக 2 ஜிபிக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா சலுகையும் வருகிறது. ஆகவே, எந்தவொரு டேட்டா வவுச்சரும் இந்த திட்டத்துக்கு தேவைப்படாது. இதுபோக அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை இந்த திட்டத்துக்கும் பொருந்தும்.
அதேபோல 100 எஸ்எம்எஸ்களை நாள்தோறும் செய்து கொள்ளலாம். மேலும், ஹர்டி கேம்ஸ், ஜிங்க் மியூசிக், பிஎஸ்என்எல் டியூன்ஸ், வாவ் எண்டர்டெயின்மெண்ட் போன்ற பல்வேறு கூடுதல் சலுகைகளையும் இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. இப்படி பல்வேறு திட்டங்களில் கஸ்டமர்களை தட்டிததூக்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.


Click it and Unblock the Notifications








