Home
News

BSNL-க்கு கும்பிடு.. மாசத்துக்கு ரூ.136 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. இனிமே ஜியோ எதுக்கு?

டிராய் (TRAI) என்னும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது வாய்ஸ் கால்கள் மட்டுமே கொண்ட திட்டங்களை கொடுக்க உத்தரவிட்ட பிறகு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ஜியோவை (Jio) தூக்கி சாப்பிட்டுள்ளது. மாதத்துக்கு வெறும் ரூ.136 செலவில் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை பிஎஸ்என்எல் கொடுக்கிறது. ஜியோவில் இதே 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் அதிக விலைக்கு கிடைக்கிறது. அதேநேரத்தில் டேட்டா கிடையாது. பிஎஸ்என்எல்லில் இருக்கிறது.

ஜியோ ரூ.1748 ப்ரீபெய்ட் திட்டத்தில் 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், இதில் டேட்டா கிடையாது. அதுவே பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்திலும் 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதில் டேட்டாவும் கிடைக்கிறது. ஒவ்வொரு திட்டத்தின் முழு சலுகைகளை பார்த்தால், உங்களுக்கு எது நல்ல திட்டம் என்பது புரிந்துவிடும்.

BSNL-க்கு கும்பிடு.. மாசத்துக்கு ரூ.136 போதும்.. 336 நாட்கள் சேவை!

பிஎஸ்என்எல் ரூ 1499 திட்ட விவரங்கள் (BSNL Rs 1499 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் வாய்ஸ் ஒன்லி திட்டமாக இருந்தாலும், லம்ப்-சம் டேட்டாவை கொடுக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 336 நாட்கள் வேலிடிட்டியில் 24 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். இதற்கு பிறகு போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்காது, கட்டணம் இருக்கும்.

ஆனால், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் அப்படி கிடையாது. வழக்கம்போல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்களை (National Roaming Voice Calls) பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் செய்து கொள்ள முடியும். அதே நேரத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.

இந்த சலுகைகள் 336 நாட்களுக்கு பொருந்தும். ஆகவே, இந்த திட்டம் அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. அதாவது, இதற்காக மாத செலவை நீங்கள் கணக்கிட்டால், வெறும் ரூ.136 மட்டுமே தேவைப்படுகிறது. இதைவிட மலிவான விலைக்கு மற்ற நிறுவனங்களில் திட்டங்கள் இல்லை. ஜியோவில் ரூ.1748 ப்ரீபெய்ட் திட்டத்தில் 336 நாட்கள் வேலிடிட்டி இருக்கிறது.

ஜியோ ரூ 1748 திட்ட விவரங்கள் (Jio Rs 1748 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட திட்டமாகும். அதாவது, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவின்படி வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே அடங்கிய திட்டமாக இது இருக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 336 நாட்கள் வேலிடிட்டி வருகிறது.

இது பிஎஸ்என்எல்லில் கிடைக்கும் வேலிடிட்டி போலவே இருந்தாலும், இதில் டேட்டா சலுகை துளியும் கிடையாது. ஆகவே, வாய்ஸ் கால்கள் மட்டும் வருடம் முழுவதும் கிடைக்கும். அதேபோல எஸ்எம்எஸ் சலுகைகளும் பிஎஸ்என்எல் போல நாளொன்றுக்கு கிடைக்காது. மொத்தமாக கொடுக்கப்படும். ஆகவே, இந்த புது திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் இருக்கிறது.

3600 எஸ்எம்எஸ் சலுகைகள் (336 நாட்களுக்கும் பொருந்தும்) மற்றும் ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ டிவி (Jio TV) & ஜியோ கிளவுட் (Jio Cinema) ஆகிய ஆப்களின் சலுகை கிடைக்கிறது. இதில் சலுகைகள் அவ்வளவுதான். இதற்கான மாதாந்திர செலவு ரூ.158ஆக இருக்கிறது. ஆனால், டேட்டா சலுகை கிடையாது. பிஎஸ்என்எல் திட்டத்தைவிட அதிகமான விலைக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 1499 Plan With Unlimited Voice 336 Days Validity Vs Jio Rs 1748 Plan With Yearly Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X