BSNL சிம் ஆக்டிவ்.. மாதம் ரூ.149 போதும்.. 300 நாட்களுக்கு வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 32 ஜிபி டேட்டா!
பிஎஸ்என்எல் (BSNL) சிம் கார்டு வைத்து இருக்கும் கஸ்டமர்கள் அதை மலிவான விலைக்கு கிட்டத்தட்ட வருடம் முழுவதும் ஆக்டிவாக வைத்திருக்க ஒரு ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) இருக்கிறது. இதில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைககளும் கிடைக்கின்றன. மேலும், மலிவு விலைக்கு கிடைக்கும் வருடாந்திர திட்டமாகவும் இது இருக்கிறது. இந்த திட்டத்தின் கிடைக்கும் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ. 1499 திட்ட விவரங்கள் (BSNL Rs 1499 Plan Details): இந்த திட்டத்துக்கு 300 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 10 மாதங்களுக்கு சிம் ஆக்டிவ் கிடைக்கிறது. ஒரு மாதத்துக்கு செலவாகும் தொகையை பார்த்தால் ரூ.149 மட்டுமே தேவைப்படுகிறது. வருடத்துக்கு ரீசார்ஜ் செய்யும்போது, மாதத்துக்கு ஏற்படும் செலவு குறைவதை இதில் பார்க்க முடிகிறது.

இந்த விலைக்கு ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவில் திட்டங்கள் கிடையாது. இந்த திட்டத்துக்கு சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், அந்த 300 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்ய முடியும். இதில் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் கால்களும் (Local, STD & Roaming Calls) கிடைக்கிறது. மேலும், 32 ஜிபி டேட்டாவை இந்த திட்டம் கொடுத்துள்ளது.
இந்த டேட்டாவை 300 நாட்கள் முழுவதும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கு மேல் டேட்டா கிடைக்காது. ஆனால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், 300 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையை இந்த திட்டம் கொடுத்துள்ளது. மலிவான விலைக்கு சிம் ஆக்டிவ் கிடைக்க இதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
இதைவிட கூடுதல் டேட்டா மற்றும் வேலிடிட்டிக்கு ரூ.500 விலை அதிகமாக கிடைக்கும் பிஎஸ்என்எல் ரூ.1999 திட்டத்தை பெற்று கொள்ளலாம். இதில் தினசரி டேட்டா கிடைக்கும். அதுபோக போஸ்ட் டேட்டாவும் கிடைக்கும். இந்த திட்டத்தை சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், டேட்டா தேவைப்படும் கஸ்டமர்களும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ. 1999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): இந்த திட்டமும் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இதில் 30 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கிறது. அதாவது, முந்தைய ப்ரீபெய்ட் திட்டத்தில் 300 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைத்தது. ஆனால், இதில் 330 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.
இந்த 1.5 ஜிபி டேட்டா முடிந்தாலும், முந்தைய திட்டத்தில் கொடுக்கப்பட்டதை போலவே 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். மற்ற சலுகைகளில் எந்த மாற்றமும் இருக்காது. முந்தைய திட்டத்தில் பார்த்த அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் கால்கள் கிடைக்கின்றன. தினமும் 100 எஸ்எம்எஸ்கள் அனுப்ப கிடைக்கின்றன.
இந்த திட்டமும் மலிவான விலைக்கு சிம் ஆக்டிவ் கொண்ட திட்டமாகவே இருக்கிறது. ரூ.1,500 மற்றும் ரூ.2,000 போன்ற விலை வேண்டாம், ரூ.1000 விலைக்குள் அதிக வேலிடிட்டி கொண்ட திட்டம் வேண்டும் என்று கேட்டால், அந்த கஸ்டமர்களுக்கும் பிஎஸ்என்எல் நிறுவனம் திட்டத்தை வைத்துள்ளது. ரூ.997 விலைக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் கிடைத்துள்ளது.
இந்த திட்டத்துக்கு 150 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் செய்து கொள்ள கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








