Home
News

BSNL SIM குடுங்க முதல்ல.. மாசம் ரூ.150-க்கு 300 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 32GB டேட்டா!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் இந்த திட்டத்தில் கிடைக்கும் சலுகைகளை பார்த்தால், மற்ற டெலிகாம் நிறுவனங்களின் கஸ்டமர்களே பிஎஸ்என்எல் சிம் கார்டை வாங்கிவிடுவார்கள் என்று அடித்து சொல்லும்படி மாதத்துக்கு ரூ.150 செலவில் 10 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. வாய்ஸ் கால்கள், டேட்டா கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே 330 நாட்கள், 300 நாட்கள், 150 நாட்கள் என்று பல்வேறு வேலிடிட்டி திட்டங்களை வைத்துள்ளது. இதில் 300 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டம் கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மலிவான விலைக்கு கிடைப்பதால், தினசரி டேட்டா கொடுக்கப்படவில்லை.

BSNL SIM குடுங்க முதல்ல.. மாசம் ரூ.150-க்கு 300 நாட்கள் வேலிடிட்டி!

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.1499 ஆக இருக்கிறது. இந்த விலைக்கு 300 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. 30 நாட்கள் வீதம் 10 மாதங்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம். ஆகவே, ஒரு மாத செலவை கணக்கிட்டால் ரூ.150 மட்டுமே தேவைப்படும். இதே விலைக்கு மற்ற நிறுவனங்களிடம் திட்டங்கள் கிடையாது.

பிஎஸ்என்எல் ரூ.1499 திட்ட விவரங்கள் (BSNL Rs 1499 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, தமிழ்நாடு கஸ்டமர்களுக்கும் கிடைக்கிறது. 300 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது. 30 நாட்கள் கணக்கில் 10 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. இந்த 10 மாதங்கள் முழுவதும் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

ஆகவே, எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த பிஎஸ்என்எல் ரூ.1499 திட்டம் கொடுத்துள்ளது. இதில் டேட்டா மட்டும் தினசரிக்கு கிடைக்காது. லம்ப்-சம் சலுகையில் கொடுக்கப்படும்.

32 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டா 300 நாட்களுக்கும் பொருந்தும். அதேபோல வேலிடிட்டிக்கு முன்பாகவே 32 ஜிபி டேட்டாவை பயன்படுத்திவிட்டால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். கூடுதல் டேட்டா வேண்டுமானால், டேட்டா வவுச்சர்களை கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஒருவேளை தினசரி டேட்டா தேவைப்பட்டால், 330 நாட்கள் வேலிடிட்டியுடன் மற்றொரு பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஆனால், டேட்டா சலுகை தினசரிக்கு பயன்படுத்தும்படி கொடுக்கப்படும். இதற்கு பிறகு போஸ்ட் டேட்டாவும் இருக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.1999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): ரூ.2000 பட்ஜெட்டில் கிட்டத்தட்ட வருடம் முழுவதும் வேலிடிட்டி கொடுக்கும் திட்டமாக இது இருக்கிறது. மற்ற நிறுவனங்களில் ரூ.3,599 விலைக்கே தினசரி டேட்டாவுடன் வருடாந்திர திட்டங்கள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 330 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

இது முந்தைய திட்டத்தைவிட 30 நாட்கள் கூடுதலாக வேலிடிட்டி கொடுக்கிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கொடுக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கொடுக்கிறது. முந்தைய திட்டத்தில் மொத்தமாகவே 32 ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்தது.

ஆனால், இதில் தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டா தீர்ந்த பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். ஆகவே, இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா சலுகைகள் கிடைக்கின்றன. அதே நேரத்தில் விலையும் மலிவாக இருக்கிறது. இதில் பெஸ்ட் ஆப்ஷனை கஸ்டமர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 1499 Plan With 300 Days Validity Unlimited Voice Calls 40 Kbps Speed Data After 32GB Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X