முடிஞ்சது Jio, Airtel கதை.. மாதம் ரூ.152 க்கு 300 நாள் வேலிடிட்டி.. BSNL-ன் அசத்தல் பிளான்!
ரிலையன்ஸ் ஜியோவின் 200 நாள் வேலிடிட்டி ரீசார்ஜின் விலை ரூ.2025 ஆக உள்ள நிலையில்.. அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, மாதம் ரூ.152 செலவில் 300 நாட்களுக்கு சர்வீஸ் வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை வழங்குகிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?
தெரியாது என்றால், தெரிந்து கொள்ளவும். அது பிஎஸ்என்எல்-ன் ரூ.1499 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் (BSNL Rs.1499 Plan) ஆகும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 300 நாட்கள் ஆகும், அதாவது 9.8 மாதங்கள் என்கிற வேலிடிட்டியை கொண்டுள்ளது. ஆக இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதால் உங்களுக்கான மாதாந்திர செலவு வெறும் ரூ.152 ஆக இருக்கும்.

ரூ.200 தொடங்கி ரூ.350 க்கு மேல் செல்லும் ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டங்களுடன் ஒப்பிடும் போது, சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள இதைவிட சீப் அண்ட் பெஸ்ட் ஆன பிளான் "கடல்லயே இல்லயாம்". சரி வாருங்கள் 300 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் ரூ.1499-ன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.1499 திட்டத்தின் நன்மைகள்: செல்லுபடியாகும் 300 நாட்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். கூடவே தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். டேட்டா நன்மையை பொறுத்தவரை இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 32ஜிபி அளவிலான டேட்டா மட்டுமே கிடைக்கும். டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் 40கேபிபிஎஸ் என்கிற ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்.
பிஎஸ்என்எல்-ன் ரூ.251 பிளானின் கிடைக்கும் தன்மை நீட்டிக்கப்பட்டுள்ளது: எக்ஸ் தளம் வழியிலாக பிஎஸ்என்எல் இந்தியா பதிவிட்டுள்ள சமீபத்திய போஸ்ட் ஆனது - ரூ.251 திட்டத்துடன் அதிகமாக கொண்டாடுங்கள், அதிகமாக ஸ்ட்ரீம் செய்யுங்கள் மற்றும் அதிகமாக இணைந்து இருங்கள் என்று கூறி, இந்த ஆபர் ஜனவரி 31, 2026 வரை செல்லுபடியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
நன்மைகளை பொறுத்தவரை பிஎஸ்என்எல்-ன் ரூ.251 திட்டமானது 30 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த 30 நாட்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் மொத்தமாக 100 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகள் கிடைக்கும்
சுவாரசியமாக ரூ.251 திட்டத்தின் கீழ் பிஐடிவி (BiTV) இலவச சந்தாவும் கிடைக்கும். அறியாதோர்களுக்கு பிஐடிவி என்பது இந்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இன்டர்நெட் டிவி சேவை (internet TV service) ஆகும்.
இதன்கீழ் 450 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள், திரைப்படங்கள், வெப் சீரீஸ்கள் மற்றும் ஃபேன்கோட் போன்ற பல்வேறு ஓடிடி தளங்கள் அனைத்தும் ஒரே ஆப்பின் கீழ் அணுக கிடைக்கும். ஒட்டுமொத்தமாக இது ஸ்மார்ட்போன்களின் வழியாகவே நேரடியாக ஆல்-இன்-ஒன் பொழுதுபோக்கு சொல்யூஷனை வழங்குகிறது.
இதற்கிடையில் பிஎஸ்என்எல் நிறுவனமானது இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களுக்குமான வாய்ஸ் ஓவர் வைஃபை (VoWiFi) சேவையை அறிமுகப்படுத்தி இருந்தது. வாய்ஸ் ஓவர் வைஃபை என்கிற வோவைஃபை தொழில்நுட்பம் ஆனது டெலிகாம் சந்தாதாரர்கள் வைஃபை மூலம் வாய்ஸ் கால்கள் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை மேற்கொள்ளவும், பெறவும் அனுமதிக்கிறது.
பெரும்பாலான நவீன ஸ்மார்ட்போன்களில் வோவைஃபை சேவைக்கான ஆதரவு ஏற்கனவே உள்ளது. இந்த சேவையை பெற, வாடிக்கையாளர்கள் தங்கள் போன் செட்டிங்ஸ்க்கு (Phone Settings) சென்று வைஃபை காலிங் அம்சத்தை (Wi-Fi Calling Feature) இயக்கலாம்.


Click it and Unblock the Notifications








