ஏழைக்கு ஏத்த BSNL.. மாசத்துக்கு ரூ.124 போதும்.. 336 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள்.. 24GB டேட்டா.. 100 எஸ்எம்எஸ்!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் கனவிலும் கொடுக்க முடியாத விலைக்கு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் வருடாந்திர திட்டங்களை (Yearly Plan) கொடுக்கிறது. மாதத்துக்கு வெறும் ரூ.124 செலவில் 336 நாட்களுக்கான வேலிடிட்டி மட்டுமல்லாமல், அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கிறது. இந்த மலிவு விலை வருடாந்திர திட்டத்தின் (Cheapest Yearly Plan) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
தனியார் டெலிகாம் நிறுவனங்களில் வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் மட்டுமே அடிமட்ட விலைக்கு கிடைக்கின்றன. அதிலும், வருடாந்திர வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் ரூ.1700 விலைக்கும் மேல் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ரூ.1499 முதல் வருடாந்திர திட்டங்கள் தொடங்குகின்றன. அதே நேரத்தில் டேட்டா சலுகைகளும் கிடைக்கின்றன.

பிஎஸ்என்எல் ரூ 1499 திட்ட விவரங்கள் (BSNL Rs 1499 Plan Details): இந்த வருடாந்திர திட்டத்தில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் என்று மூன்று சலுகைகளும் கிடைக்கிறது. அதேபோல போஸ்ட் டேட்டா சலுகையையும் இந்த திட்டம் கொடுக்கிறது. இதை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மொத்தமாக 24 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா வருகிறது.
இந்த டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டா 336 நாட்களுக்கும் பொருந்தும். ஆகவே, டேட்டாவில் இந்த திட்டம் மாதத்துக்கே 2 ஜிபி என்னும் கணக்கில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்கு மற்ற நிறுவனங்களில் டேட்டாவே கிடைக்காது என்பதால், இது பரவாயில்லை என்றே தோன்றுகிறது. அதேபோல எஸ்எம்எஸ் சலுகையும் நாளொன்றுக்கு 100 என்னும் கணக்கில் கிடைக்கிறது.
இதுபோன்ற வாய்ஸ் கால்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்களில் லம்ப்-சம் முறையிலேயே எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஆனால், இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் நாளொன்றுக்கு கிடைக்கிறது. இறுதியாக வாய்ஸ் கால்கள் சலுகை இருக்கிறது. இது வழக்கம்போல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்களாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஜியோவில் இதே போல மலிவு விலைக்கு வருடாந்திர திட்டத்தை பெற வேண்டுமானால், ரூ.1748 விலைக்கு கிடைக்கும் திட்டத்துக்கு மட்டுமே செல்ல முடியும். இந்த திட்டத்துக்கு டேட்டா சலுகைகள் கிடையாது. வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகை மட்டுமே கொடுக்கப்படும். இருப்பினும், ஜியோவில் மட்டுமே கிடைக்கும் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.
அதாவது, ஜியோ டிவி (Jio TV), ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) போன்ற சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். 336 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இதில் டேட்டா சலுகை கிடைக்காது. இதே போல ஏர்டெல் நிறுவத்திலும் மலிவு விலை வருடாந்திர திட்டம் ரூ.1849 விலைக்கு தொடங்குகிறது.
இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, ஜியோவைவிட கூடுதல் விலைக்கு கிடைத்தாலும் 29 நாட்கள் வேலிடிட்டி அதிகமாக வருகிறது. ஆனால், இதிலும் டேட்டா சலுகை கிடையாது. வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். ஆகவே, 3600 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கிடைக்கிறது.
வோடபோன் ஐடியாவை பொறுத்தவரையில் ரூ.1999 விலைக்கு மலிவு விலை வருடாந்திர திட்டம் தொடங்குகிறது. இந்த திட்டத்தில் மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனத்தை போல 24 ஜிபி லம்ப்-சம் டேட்டாவுடன் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. ஆனால், பிஎஸ்என்எல்லைவிட ரூ.500 விலை அதிகமாக இருக்கிறது. ஆகவே, பிஎஸ்என்எல் மலிவு விலையாகும்.


Click it and Unblock the Notifications