Home
News

இனிமே மாசம் ரூ.136 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 24 ஜிபி டேட்டா.. பிஎஸ்என்எல் குஷி!

ஒட்டுமொத்த டெலிகாம் மார்கெட்டிலும் இந்த விலைக்கு கொடுக்க முடியாதுங்க என்று மூக்கில் விரல் வைக்கும்படியான விலைக்கு வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கொடுக்கிறது. மாதத்துக்கு வெறும் ரூ.136 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் லம்ப்-சம் டேட்டாவை கொடுக்கிறது. ஆனால், இது மாத செலவுதான், வருடத்துக்கும் ரீசார்ஜ் செய்கையில் ரூ.1,499 தேவைப்படும். இந்த விலையும்கூட அடிமட்டம்தான். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ 1499 வருடாந்திர திட்டம் (BSNL Rs 1499 Yearly Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் கிட்டத்தட்ட வருடம் முழுவதும் வேலிடிட்டி கொடுக்கிறது. அதாவது, 336 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கிறது. இதில் டேட்டா மட்டும் லம்ப்-சம் முறையில் குறைவாக கிடைக்கிறது. ஆனால், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் அப்படியில்லை.

இனிமே மாசம் ரூ.136 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்!

அதாவது, 24 ஜிபி டேட்டா மட்டுமே 336 நாட்களுக்கும் கிடைக்கிறது. இருப்பினும், 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை கொடுத்து கஸ்டமர்களை தட்டித் தூக்கிறது. இந்த விலைக்கு டேட்டா ஒகே தான். ஆனால், வாய்ஸ் கால்களை அடித்து கொள்ள முடியாது. 336 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் கால்கள் கிடைக்கிறது.

அதேபோல எஸ்எம்எஸ் சலுகையும் வழக்கம்போலவே நாளொன்றுக்கு 100 வீதம் கிடைக்கிறது. பொதுவாக இதுபோன்ற லம்ப்-சம் டேட்டா திட்டங்களில் எஸ்எம்எஸ்களும் மொத்தமாக கொடுக்கப்படும். ஆனால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, 11 மாதங்களுக்கான சலுகையை வெறும் ரூ.136 மாதாந்திர செலவில் பெற்று கொள்ளலாம்.

ஆகவே, இந்த திட்டம் மற்ற நிறுவனங்களைவிட மலிவு என்பதில் சந்தேகமில்லை. வருடத்துக்கு வேண்டாம், மாதாந்திரத்துக்கு மட்டுமே ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறதா என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் வாய்ஸ் ஒன்லி திட்டங்களையும் வைத்திருக்கிறது. இவையும் அடிமட்ட விலையிலேயே கிடைக்கிறது. அதில் 3 திட்டங்களை பார்ப்போம்.

முதவாவது திட்டம் ரூ.99 விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.100 செலவில் திட்டத்தை பெற்று கொள்ளலாம். இந்த விலைக்கு ஏற்ப 17 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த 17 நாட்கள் முழுவதும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை மட்டுமே கிடைக்கிறது.

எஸ்எம்எஸ், டேட்டா போன்ற சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்காது. அதுவே, 30 நாட்கள் வேலிடிட்டியில் ப்ரீபெய்ட் திட்டம் கேட்டால், ரூ.147 விலைக்கு ஒரு திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்களுடன் லம்ப்-சம் டேட்டாவும் கிடைக்கிறது. அதாவது, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் போக 10 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது.

இந்த 10 ஜிபி டேட்டாவுக்கு பிறகு உங்களுக்கு போஸ்ட் டேட்டா கிடையாது. ஆகவே, டேட்டாவை பயன்படுத்தும்பட்சத்தில் கூடுதலாக கட்டணம் இருக்கும். இதற்கு அடுத்து 3 மாதங்களுக்கு வாய்ஸ் கால்கள் திட்டம் வேண்டுமானால், ரூ.439 விலைக்கு கிடைக்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்துக்கு செல்லலாம். இதில் டேட்டா கிடையாது. ஆனால், எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 90 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. இதுபோக 300 எஸ்எம்எஸ்கள் லம்ப்-சம் சலுகையில் பயன்படுத்த கிடைக்கிறது. இதை தவிர வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடையாது. இந்த திட்டங்களில் உங்களுக்கானதை தேர்ந்தெடுங்கள்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 1499 Plan Offer 336 Days Validity Unlimited Calls 24GB Data With FUP Cheapest Yearly Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X