Jio, Airtel-ஐ முடித்த BSNL.. 300 நாட்களுக்கு 1 ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா, எஸ்எம்எஸ்!
பிஎஸ்என்எல் (BSNL) சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களை பார்த்து ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா கஸ்டமர்கல் மூக்கில் விரல் வைக்கும்படி 300 நாட்களுக்கு நம்ப முடியாத விலைக்கு ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ.1499 திட்ட நன்மைகள் (BSNL Rs 1499 Plan Benefits): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, 300 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. இதில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice) சலுகைகள் கிடைக்கும். மேலும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த பிஎஸ்என்எல் ரூ.1499 திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும், இந்த பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு டேட்டா கொடுக்கப்படவில்லை. இருப்பினும், 32 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவை வேலிடிட்டி முழுவதும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆகவே, 32 ஜிபி டேட்டாவை முன்கூட்டியே பயன்படுத்தி முடித்தால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை கொடுக்கப்படும்.
ஒருவேளை கஸ்டமர்களுக்கு கூடுதல் டேட்டா தேவைப்பட்டால் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதுபோக நாளொன்றுக்கு டேட்டா வேண்டுமானால் பிஎஸ்என்எல் ரூ.199 திட்டத்தை கஸ்டமர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதில் தினசரி டேட்டா மட்டுமல்லாமல், கூடுதல் டேட்டாவும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ.1999 திட்ட நன்மைகள் (BSNL Rs 1999 Plan Benefits): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 330 நாட்களாக இருக்கிறது. ஆகவே, பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 495 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். போஸ்ட் டேட்டாவும் உள்ளது.
அதாவது, நாளொன்றுக்கு கிடைக்கும் 1.5 ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இந்த வேகத்தில் தொடர்ந்து டேட்டா கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த பிஎஸ்என்எல் ரூ.1999 திட்டத்தில் செய்து கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை கொடுக்கிறது.
ஒருவேளை 300 நாட்கள், 330 நாட்கள் வேலிடிட்டி போதாது என்றால், 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் திட்டமே வேண்டும் என்று கேட்டால், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களைவிட மலிவான விலை மட்டுமல்லாமல், நல்ல சலுகைகளுடன் கிடைக்கும் பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ.2399 திட்ட நன்மைகள் (BSNL Rs 2399 Plan Benefits): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்களாக இருக்கிறது. இதை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை கிடைக்கிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்பட்டு உள்ளது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைத்து இருக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வருடாந்திர திட்டங்களில் இந்த மூன்று திட்டங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதன் விலை மற்றும் சலுகைகளுக்கு ஏற்ப ஆப்ஷனில் எடுத்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
