BSNL போட்டப் போடு.. மாதம் ரூ.150 க்கு 300 நாட்கள் வேலிடிட்டி.. ரூ.997-க்கு 150 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ்!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு 150 நாட்கள் மற்றும் 300 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களானது, தனியார் டெலிகாம் நிறுவனங்களைவிட மலிவான விலைக்கு கிடைக்கிறது. மாதத்துக்கு ரூ.150 செலவில் 300 நாட்கள் வரை வேலிடிட்டி கொடுக்கிறது. இப்படி 2 திட்டங்கள் உள்ளன.
இப்போது, பிஎஸ்என்எல் ரூ.1499 திட்டம் மற்றும் பிஎஸ்என்எல் ரூ.997 திட்டம் ஆகியவற்றின் விவரங்களை தெரிந்து கொள்ள இருக்கிறோம். இதில் ரூ.1499 திட்டமானது, 10 மாதங்களுக்கு (300 நாட்கள்) வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, மாதத்துக்கு ரூ.150 செலவில் கிட்டத்தட்ட வருடம் முழுவதும், டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம்.

அதேபோல 150 நாட்கள் வேலிடிட்டியுடன் பிஎஸ்என்எல் ரூ.997 திட்டம் கிடைக்கிறது. இது 5 மாதங்களுக்கான திட்டமாக இருப்பதால் மாதத்துக்கு ரூ.199 செலவில் பயன்படுத்தி கொள்ளலாம். இதில் டேட்டா சலுகை ஒரே மாதிரியாக கிடைக்காது. விலைக்கு ஏற்ப லம்ப்-சம் மற்றும் தினசரி டேட்டாவாக கொடுக்கப்படும். வாய்ஸ் கால்களில் எந்த மாற்றமும் இருக்காது.
பிஎஸ்என்எல் ரூ.1499 திட்ட விவரங்கள் (BSNL Rs 1499 Plan Details): அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகைகளை இந்த பிஎஸ்என்எல் பிஎஸ்என்எல் ரூ.1499 திட்டம் கொடுக்கிறது. முன்பே சொன்னதை போல இதில் விலைக்கு ஏற்ப டேட்டா சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, தினசரிக்கு கிடைக்காது.
மொத்தமாகவே 32 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இந்த டேட்டாவுக்கு பிறகு பிஎஸ்என்எல் வழங்கும் 40 கேபிபிஎஸ் வேக போஸ்ட் டேட்டா கிடைக்கும். 32 ஜிபி டேட்டாவானது, இந்த திட்டத்துக்கு கிடைக்கும் 300 நாட்கள் வேலிடிட்டி முழுவதுக்கும் கிடைக்கும் சலுகையாக இருக்கிறது. மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கொடுத்து இருக்கிறது.
இந்த வாய்ஸ் கால்கள், டேட்டா, போஸ்ட் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை தவிர வேறு எந்த சலுகைகளும் கிடைக்காது. 10 மாதங்களுக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் போதுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஏனென்றால், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களில் இந்த விலைக்கு திட்டங்கள் கிடைக்காது.
இதில் பாதி வேலிடிட்டியுடன் பிஎஸ்என்எல் ரூ.997 திட்டம் கிடைக்கறது. அதாவது, 150 நாட்கள் வேலிடிட்டியை கொடுக்கிறது. இந்த நாட்களில் முந்தைய திட்டத்தை போலல்லாமல், டேட்டா சலுகையை நாளொன்றுக்கு கொடுக்கிறது. ஆகவே, இதில் கூடுதலாக டேட்டா கிடைக்கும். மற்ற சலுகைகள் வழக்கம்போலவே கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
பிஎஸ்என்எல் ரூ.997 திட்ட விவரங்கள் (BSNL Rs 997 Plan Details): இந்த திட்டத்துக்கு 150 நாட்கள் (5 மாதங்கள்) வேலிடிட்டி கிடைக்கிறது. முந்தைய திட்டத்தில் மொத்தமாகவே 32 ஜிபி டேட்டா கிடைத்தது. ஆனால், இதில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். ஆகவே, மொத்தமாக 300 ஜிபி டேட்டாவை பெற முடியும். இது பல மடங்கு அதிகமாக இருக்கிறது.
இந்த 2 ஜிபிக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போலவே இந்த பிஎஸ்என்எல் ரூ.997 திட்டத்திலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகைகள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications
