பிஎஸ்என்எல் பயனர்களா நீங்கள்- இதோ சிறந்த நீண்ட கால திட்டம் இதுதான்: உடனே ரீசார்ஜ் செய்யலாம்!
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.1498 திட்டமானது சிறந்த நீண்ட கால டேட்டா திட்டமாகும். ரூ.1498 திட்டம் டேட்டா வவுச்சர்கள் பிரிவின் கீழ் வருகிறது. உங்களுக்கு அதிக டேட்டா பயன்படுத்துபவர் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு தேவையில்லாதவராக இருந்தால் நீங்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்யலாம். குரல் அழைப்பிற்கு நீங்கள் தேவைக்கேற்ப டாக்டைம் வவுச்சர்களை ரீசார்ஜ் செய்யலாம்.

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.1498 திட்டம்
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) வழங்கும் ரூ.1498 திட்டமானது தற்போது சந்தையில் கிடைக்கிறது. இது சிறந்த நீண்ட கால திட்டமாகும். ஒவ்வொரு நிறுவனமும் ரீசார்ஜ் விலை உயர்வை அறிவித்துள்ளது. இதையடுத்து நீண்ட கால திட்டத்தை தேர்வு செய்யவேண்டியது கட்டாயமாக இருக்கிறது. குறிப்பாக வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது சிறந்த தேர்வாக இருக்கிறது. கட்டண உயர்வுகளுக்கு முன்பே பிஎஸ்என்எல் மலிவான கட்டணங்களை வழங்கியதால் தற்போதும் பிஎஸ்என்எல் நீண்ட கால திட்டம் இன்னும் கவர்ச்சிகரமானதாகவே இருக்கிறது. அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ரூ.1498 திட்டம் மிகவும் சிறந்த திட்டமாகும்.

தினசரி 2 ஜிபி டேட்டா
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.1498 ப்ரீபெய்ட் திட்டமானது டேட்டா வவுச்சர்கள் பிரிவின் கீழ் வருகிறது. நீங்கள் அதிக டேட்டா பயன்படுத்துபவர் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு தேவைப்படாதவர் என்றால் இந்த திட்டத்தை வாங்கலாம். அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ரூ.1498 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வழங்கப்படும் டேட்டா வரம்பு முடிந்த உடன் இதன் வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறைகிறது.

வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள்
வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் வேறு எந்த நன்மைகளையும் வழங்கவில்லை. இதில் சிறந்த விஷயம் என்னவென்றால் வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப டாக்டைம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். தினசரி வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் தேவைப்படும் ஒருவராக நீங்கள் இருந்தால் இந்த பேக் உங்களுக்கானது அல்ல. பிஎஸ்என்எல் வழங்கும் வரம்பற்ற குரல் அழைப்பு பேக் ஆனது ரூ.1498 டேட்டா வவுச்சர் திட்டத்துடன் பூஸ்டர் பிளான் ஆக இருக்கும். பிஎஸ்என்எல் பல்வேறு விலையில் நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது.

4ஜி சேவையை முற்றிலும் வழங்க நடவடிக்கை
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4ஜி சேவையில் இருந்து 5ஜி சேவையை வழங்க ஆயத்தமாகி வரும் நேரத்தில், அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் 4ஜி சேவையை முற்றிலும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் எப்போது 4ஜி சேவையை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.

செலவுகள், வருமானம் உள்ளிட்ட விவரங்கள்
அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செலவுகள், வருமானம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மக்களவையில் கேள்விகள் எழுப்பட்டது. இதற்கு மத்திய தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுனிஷ் சவுகான் பதிலளித்தார். அதில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். அதேபோல் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எள் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களையும் விலக்கும் திட்டம் எதுவும் இல்லை என குறப்பிட்டார்.

பிஎஸ்என்எல் 4ஜி சேவை
பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளை வெளியிடுவதற்கான திட்டம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சவால்கள் குறித்து பிடிஐ அறிக்கையில் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம். பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவைகளை இந்தியா முழுவதும் வெளியிடுவதற்கான காலஅளவாக செப்டம்பர் 2022 என நிர்ணயித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தொலைத்தொடர்பு நிறுவனம் நாடு முழுவதும் முழுமையாக 4ஜி சேவைகளை வழங்கினால் செயல்பாட்டின் முதல் ஆண்டில் சுமார் 900 கோடி ரூபாய் வரை வருவாயை அதிகரித்து வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications