30 நாட்கள் வேலிடிட்டி தரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டம்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் பல அசத்தலான திட்டங்களை வழங்குகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட இந்நிறுவனம் குறைந்த விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

கடந்த மாதம் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின.ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்று வரை குறைந்த விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. மேலும் இந்நிறுவனம்30 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தைப் பற்றி இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 10ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்ததிட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் இலவச BSNL ட்யூன்களைப் பெறமுடியும். அதேபோல் இந்தபிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்தவிலையில் வழங்கும் டேட்டா வவுச்சர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.19 டேட்டா வவுச்சர்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.19 டேட்டா வவுச்சர் ஆனது 2ஜிபி டேட்டாநன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.56 டேட்டா வவுச்சர்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.56 டேட்டா வவுச்சர் ஆனது 10ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாகபத்து நாட்களுக்கு இலவச Zing சந்தாவுடன் வருகிறது இந்த ரூ.56 டேட்டா வவுச்சர்.

பிஎஸ்என்எல் ரூ.75 டேட்டா வவுச்சர்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.75 டேட்டா வவுச்சர் ஆனது 50 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் 100 நிமிட இலவச குரல் அழைப்பு மற்றும் 50 நாட்களுக்கு இலவச PRBT ஆகியவற்றை வழங்குகிறது இந்த திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.94 டேட்டா வவுச்சர்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.94 டேட்டா வவுச்சர் ஆனது 75 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் 100 நிமிட இலவச குரல் அழைப்பு மற்றும் 60 நாட்களுக்கு இலவச PRBT ஆகியவற்றை வழங்குகிறது இந்த திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.97 திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.97 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளது.அதேபோல் லோக்துன் நன்மையை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல்
திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.98 திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.98 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின்வேலிடிட்டி 22 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் வழங்கப்படவில்லை. இருந்தபோதிலும் 22 நாட்களுக்கு ஈரோஸ் நவ்வின் இலவச ஓவர்-தி-டாப் (OTT) சந்தாவுடன் வருகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.98 திட்டம்.


Click it and Unblock the Notifications