இனி 30 நாட்கள் வேலிடிட்டி இல்லை.. திடீரென மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மையை குறைத்தது BSNL..
ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களுக்குப் போட்டியாக இப்போதும் கம்மி பட்ஜெட்டில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம். தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி விரிவாக்கம் செய்து வருகிறது. அதேசமயம் சில ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளையும் குறைத்து வருகிறது. அதாவது இப்போது ரூ.147 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைக் குறைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 147 Prepaid Plan) ஆனது முன்பு 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இப்போது பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 25 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும்.

அதேபோல் இந்த பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டத்தில் 10ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. இதுதவிர அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படவில்லை. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் சில அசத்தலான ப்ரிபெய்ட் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) 54 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 108ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 80 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 160ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன.
அதாவது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். ஆனால் கூடுதல் சலுகைகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








