Home
News

கம்மி விலையில் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டம்.! என்னென்ன நன்மைகள்.!

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய புதிய திட்டங்கள் மற்றும் அசத்தலான சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் கம்மி விலையில் அதிக சலுகைகளை வழங்குகிறது இந்நிறுவனம்.

ஆனால் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கிவிட்டன. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது வரை 4ஜி சேவையைக் கூட வழங்கவில்லை. இருந்தபோதிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் 4ஜி சேவையையும் அடுத்த ஆண்டு இறுதியில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கம்மி விலையில் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டம்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அந்த கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் அது வழங்கும் சலுகைகள் என்னென்ன என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் 10ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர இலவச பிஎஸ்என்எல் ட்யூன்கள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக அதிக வேலிடிட்டி மற்றும் அருமையான டேட்டா நன்மை கிடைப்பதால் இந்த திட்டத்தில் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். மேலும் இந்நிறுவனத்தின் சில அசத்தலான திட்டங்களை இப்போது பார்ப்போம்.

கம்மி விலையில் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் உள்ளது. குறிப்பாக இந்ததிட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 40kbps ஆக குறையும். இதுதவிர Arena மொபைல் கேமிங் சேவையையும் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானில்ரூ.10 டாக்டைம், தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40kbps ஆக குறையும்.இதுதவிர கேமிங் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஒரு மாதம் வேலிடிட்டி உடன் இந்த ரூ.239 திட்டம் அறிமுகம்

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள்.

கம்மி விலையில் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினசரி 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் இரவு நேரத்தில் வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இலவச BSNL ட்யூன்ஸ், ஜிங் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs.147 prepaid plan offers 30 days validity! What are the benefits? : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X