Home
News

BSNL க்கு அந்த மனசு தான்.. வெறும் ரூ.147 க்கு இறக்கிய ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 5 ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு ரூ.99 முதல் ரீசார்ஜ் திட்டம் தொடங்குகிறது. இந்த விலைக்கே வாய்ஸ் கால்கள், டேட்டா சலுகைகள் கிடைக்கிறது. ஆனால், இதற்கு ஏற்ப வேலிடிட்டி குறைவாக இருக்கும். இருப்பினும், பிஎஸ்என்எல் ரூ. 147 ப்ரீபெய்ட் திட்டம் பக்கா வேலிடிட்டியுடன் கிடைப்பதால், அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. இந்த மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ. 147 திட்ட விவரங்கள் (BSNL Rs 147 Plan Details): 24 நாட்கள் வேலிடிட்டியை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. இந்த நாட்கள் முழுவதும் சிம் ஆக்டிவ் (SIM Active) கிடைக்கும். ஆகவே, வாய்ஸ் கால்கள் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் (Voice Calls Local STD Roaming) கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் 5 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை கிடைத்துள்ளது.

BSNL க்கு அந்த மனசு தான்.. வெறும் ரூ.147 க்கு இறக்கிய ரீசார்ஜ்!

இந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைத்துள்ளது. இந்த வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் சிம் ஆக்டிவ் சலுகைகளை மட்டுமே இந்த திட்டம் கொடுத்து உள்ளது. மற்ற சலுகைகள் ஏதும் கிடைக்காது. ஆகவே, அவுட்கோயிங் எஸ்எம்எஸ்கள் கிடைக்காது. இன்கம்மிங் எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம். எஸ்எம்எஸ் சலுகைகளுக்கு மற்றொரு திட்டம் உள்ளது.

பிஎஸ்என்எல் ரூ. 153 திட்ட விவரங்கள் (BSNL Rs 153 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் அதே 24 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதில் தினசரி டேட்டா (Daily Data) மற்றும் தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS) சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 24 நாட்கள் முழுவதும் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கிடைக்கும்.

நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டாவை கொடுக்கப்படும். இந்த டேட்டாவுக்கு பிறகும் முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போல 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். 24 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 24 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். மேலும், இதில் எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.

இதைவிட கொஞ்சம் அதிகமாக விலைக்கு 42 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. ஆனால், இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களின் சலுகை கிடைக்காது. வேலிடிட்டி முழுவதும் இவ்வளவு நிமிடங்கள் என்று மட்டுமே ஒதுக்கப்படும். சிம் ஆக்டிவ் மட்டுமே போதுமானால், இந்த திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ. 197 திட்ட விவரங்கள் (BSNL Rs 197 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 42 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இது முந்தைய திட்டங்களைவிட அதிகமாக இருக்கிறது. ஆனால், இதில் 300 நிமிடங்களுக்கு மட்டுமே வாய்ஸ் கால்களின் சலுகை கிடைக்கும். இந்த நிமிடங்களுக்குள் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம்.

அதேபோல டேட்டாவும் மொத்தமாகவே 4 ஜிபி மட்டுமே கிடைக்கும். இந்த 4 ஜிபிக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். மேலும், 100 எஸ்எம்எஸ் சலுகையையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. இந்த மூன்று திட்டங்களில் உங்களுக்கான பெஸ்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். சிம் ஆக்டிவ் விரும்பும் கஸ்டமர்களுக்கு ஏற்ற திட்டங்களாக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 147 Plan With Voice Calls Local STD Roaming 5GB Data 24 Days Validity 40 Kbps Post Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X