BSNL சிம் இருக்குல.. அடுத்த 24 நாட்களுக்கு ரூ.147 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 5 ஜிபி டேட்டா!
பிஎஸ்என்எல் சிம் (BSNL SIM) கார்டு வைத்து இருந்தால் ரூ.99 முதல் ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்கும். வாய்ஸ் கால்களுடன் குறைந்தபட்சம் 14 நாட்கள் வேலிடிட்டியுடன் திட்டங்கள் கிடைக்கின்றன. இதில் 24 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் திட்டம் அதிகமாக வரவேற்பு பெற்று வருகிறது.
ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) நிறுவனங்களில் ரூ.150 இருந்தால் ரீசார்ஜ் செய்ய முடியாது. டேட்டா வவுச்சர்கள் மற்றும் ஓடிடி திட்டங்கள் மட்டுமே கிடைக்கும். வாய்ஸ் கால்கள், டேட்டா சலுகைகள் கொண்ட திட்டங்கள் கிடைக்காது. ஆனால், பிஎஸ்என்எல்லில் கதையே வேறு அன்லிமிடெட் வாய்ஸ் கால்களின் சலுகை கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.147 திட்ட விவரங்கள் (BSNL Rs 147 Plan Details): இந்த மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 24 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இது ஒரு மாதத்தைவிட கம்மியாக இருந்தாலும், இந்த விலைக்கு தனியார் டெலிகாம் நிறுவனங்களிடம் திட்டங்கள் கிடைக்காது. இந்த 24 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் கால்கள் (Unlimited Local Calls) கிடைக்கும்.
மேலும், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை (STD & Roaming Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இந்த வாய்ஸ் கால்கள் சலுகை போக 5 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. இதை 24 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் எப்போது வேண்டுமானால், முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். தினசரி லிமிட் கொடுக்கப்படவில்லை.
இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். இதில் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்காது. இதைவிட மலிவான விலைக்கு திட்டம் வேண்டுமானால், ரூ.99 திட்டத்தை கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் குறைந்தபட்ச வேலிடிட்டி மட்டுமே கிடைக்கும். ஆனால், விலை மிகவும் மலிவாக இருக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.99 திட்ட விவரங்கள் (BSNL Rs 99 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 14 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. அதாவது, டெலிகாம் நிறுவனங்கள் 28 நாட்களை ஒரு மாதமாக கணக்கில் எடுக்கிறது. ஆகவே, இதில் பாதியாக 14 நாட்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு இந்த திட்டத்துக்கு வேலிடிட்டி கிடைக்கிறது.
இந்த நாட்களில் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கும். முந்தைய திட்டத்தை போலவே எஸ்எம்எஸ் சலுகைகள் இதிலும் கிடைக்காது. ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் கால்கள், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் கிடைக்கும். மேலும், 50 எம்பி டேட்டா கிடைக்கும்.
இந்த டேட்டாவுக்கு பிறகும் முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இப்படி அடிமட்ட விலைக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் திட்டங்களை வைத்துள்ளது. கொஞ்சம் கூடுதல் டேட்டா வேண்டுமானால், பிஎஸ்என்எல் ரூ.247 திட்டத்தை கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ.247 திட்ட விவரங்கள் (BSNL Rs 247 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களுக்கு மொத்தமாக 50 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை கொடுக்கும். 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications