இறங்கி அடித்த BSNL.. ரூ.147 போதும்.. 24 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 5 ஜிபி டேட்டா!
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் அடிமட்ட விலைக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா சலுகைகளை கொடுக்கின்றன. வெறும் ரூ.150 இருந்தால் போதும், மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். ரூ.99 முதல் திட்டம் கிடைப்பதால், அதிகமாக ரீசார்ஜ் செய்யப்படும் திட்டங்களாகவும் இவை இருக்கின்றன. இந்த மூன்று திட்டங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ. 147 திட்ட விவரங்கள் (BSNL Rs 147 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் போஸ்ட் டேட்டா மட்டுமே கிடைக்கும். எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்காது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி கால்கள் (Unlimited Local STD Calls) கிடைக்கிறது.

மேலும், 5 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இது லம்ப்-சம் டேட்டாவாக இருக்கிறது. இருப்பினும், 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. 5 ஜிபி டேட்டாவை வேலிடிட்டி முன்பாகவே பயன்படுத்திவிட்டால், இந்த போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த மூன்று சலுகைகள் மட்டுமே கிடைக்கும். 24 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும்.
இன்கம்மிங் எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைக்கும். அவுட்கோயிங் எஸ்எம்எஸ்கள் கிடைக்காது. இதைவிட மலிவான விலைக்கு மற்றொரு திட்டம் இருக்கிறது. இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்காது. நிமிடங்கள் கணக்கில் கொடுக்கப்படும். ஆகவே, விலை மலிவாக இருக்கிறது. இதில் வேலிடிட்டி குறைவாக இருக்கிறது. விலையும் மலிவாக இருக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ. 107 திட்ட விவரங்கள் (BSNL Rs 107 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 20 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்கள் முழுவதும் 200 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படுகிறது. இதில் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் கிடைக்கும். முந்தைய திட்டத்தைவிட 2 ஜிபி டேட்டா கம்மியாக கிடைக்கிறது.
ஆகவே, 3 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பெற்று கொள்ளலாம். இதைவிட மலிவான விலைக்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. ரூ.99 விலைக்கு கிடைக்கிறது. கையில் ரூ.100 இருந்தால் போதும், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் விவரங்களை பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ. 99 திட்ட விவரங்கள் (BSNL Rs 99 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் மட்டுமே கிடைக்கும். முந்தைய திட்டத்தை போல இதில் நிமிட கணக்கில் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படாது. வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.
50 எம்பி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இந்த மூன்று திட்டங்களிலும் எஸ்எம்எஸ்கள் மட்டும் கிடைக்காது. சிம் ஆக்டிவ் கிடைக்கிறது. ஆகவே, மலிவான சிம் ஆக்டிவ் மற்றும் வாய்ஸ் கால்கள் வேண்டுமானால், இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மலிவான விலைக்கும் கிடைக்கும். ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களில் இதுபோன்ற திட்டம் கிடைக்காது.


Click it and Unblock the Notifications








