BSNL சிம் இருக்கா? ரூ.147 க்கு முடிஞ்சு போச்சு.. 24 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 5 ஜிபி டேட்டா!
பிஎஸ்என்எல் சிம் கார்டு வைத்திருக்கும் ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டால், பல்வேறு ஆப்ஷன் இருக்கிறது. இதில் டேட்டா, வாய்ஸ் கால்கள் அல்லது வேலிடிட்டிக்கு ஏற்ப திட்டங்கள் இருப்பதால், எதை ரீசார்ஜ் செய்வது என்பதில் குழப்பம் இருக்கலாம். கொஞ்சம் டேட்டா இருந்தால் போதும், வாய்ஸ் கால்கள் மற்றும் சிம் ஆக்டிவ் அதிகமாக இருக்க வேண்டும் என்றால், முதலில் பார்க்க இருக்கும் திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களில் குறைந்தபட்ச விலை கொண்ட திட்டமே கிட்டத்தட்ட ரூ.200 க்கு கிடைக்கிறது. ஆனால், பிஎஸ்என்எல்லில் ரூ.99 முதல் திட்டங்கள் கிடைக்கின்றன. இதில் ஓரளவுக்கு டேட்டாவுடன் வாய்ஸ் கால்கள் மற்றும் சிம் ஆக்டிவ் கொடுக்கும் மலிவு விலை திட்டமாக பிஎஸ்என்எல் ரூ.147 திட்டம் இருக்கிறது. இதில் எஸ்எம்எஸ் சலுகை மட்டும் கிடைக்காது.

பிஎஸ்என்எல் ரூ. 147 திட்ட விவரங்கள் (BSNL Rs 147 Plan Details): 24 நாட்கள் வேலிடிட்டியை இந்த மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. இந்த நாட்கள் முழுவதும் லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data), போஸ்ட் டேட்டா (Post Data) மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகைகள் மட்டுமே கிடைக்கும். அவுட்கோயிங் எஸ்எம்எஸ் சலுகை வராது.
ஆகவே, இன்கம்மிங் எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்பட்டுவிடும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 5 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்களை (Unlimited Local, STD & Roaming Voice Calls) செய்து கொள்ளலாம்.
ஒருவேளை எஸ்எம்எஸ் சலுகைகள் வேண்டுமானால், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ்என்எல் சில்வர் ஜூபிலி ரூ. 225 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல வேலிடிட்டியும் கூடுதலாக கொடுக்கப்படும். இந்த திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ. 225 திட்ட விவரங்கள் (BSNL Rs 225 Plan Details): இந்த பிஎஸ்என்எல் சில்வர் ஜூபிலி திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த வேலிடிட்டி முழுவதும் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, வேலிடிட்டி முழுவதும் மொத்தமாக 75 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் உள்ளது.
முந்தைய திட்டத்தில் எஸ்எம்எஸ் சலுகைகளே கிடையாது. ஆனால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். வாய்ஸ் கால்களில் எந்த மாற்றமும் கிடையாது. 30 நாட்களிலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ள முடியும். அதிக வேலிடிட்டிக்கு மாற்றொரு திட்டம் உள்ளது.
பிஎஸ்என்எல் ரூ. 319 திட்ட விவரங்கள் (BSNL Rs 319 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 60 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களுக்கு மொத்தமாகவே 10 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். ஏனென்றால், வேலிடிட்டி அதிகமாக இருக்கிறது. இந்த 10 ஜிபிக்கு பிறகும் முந்தைய திட்டங்களில் கிடைத்ததை போலவே 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.
மொத்தமாக 300 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இதில் மலிவான விலைக்கு சிம் ஆக்டிவ் வேண்டுமானால், முதலாவது திட்டத்தையும், அதிக டேட்டா வேண்டுமானால் இரண்டாவது திட்டத்தையும், அதிக வேலிடிட்டி வேண்டுமால், மூன்றாவது திட்டத்தையும் பெற்று கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








