Home
News

5 ரூபாய்க்கும் குறைந்த விலை.. புது BSNL திட்டம்.. 30 நாள் வேலிடிட்டி.. 10GB டேட்டா.. எந்த திட்டம் தெரியுமா?

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இந்தியாவில் தொடர்ந்து பல வியக்கத்தகு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து, ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்ற வோடபோன் ஐடியா (Vodafone Idea) தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. அந்த வகையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தினசரி 5 ரூபாய்க்கும் குறைந்த விலையில் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகளை வழங்கும் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை ரூ.150-க்கும் குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் விலை என்ன? இதன் கீழ் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

உங்களிடம் ஒரு BSNL 4G சிம் கார்டு இருக்கிறது என்றாலோ, அல்லது நீங்கள் விரைவில் பிஎஸ்என்எல் 5ஜி சிம் கார்டு (BSNL 5G SIM Card) வாங்க போகிறீர்கள் என்றாலோ, நீங்கள் கட்டாயமாக இந்த பதிவை படிக்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது 150 ரூபாய்க்கும் குறைவான மலிவு விலையில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது பிஎஸ்என்எல் ரூ.147 திட்டம் என்ற பெயருடன் ஒரு முழு மாதத்திற்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது.

5 ரூபாய்க்கும் குறைந்த விலை.. புது BSNL திட்டம்.. 30 நாள் வேலிடிட்டி..

BSNL ரூ.147 ரீசார்ஜ் திட்டம் (BSNL Rs 149 Recharge Plan):
BSNL வழங்கும் ரூ.147 ரீசார்ஜ் திட்டம் பல கூடுதல் நன்மைகளுடன் வருகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு ரூ.4.90 விலைக்கும் குறைவான கட்டணத்தில் இயங்குகிறது. இது பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இதில் உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளைச் செய்யலாம். இந்த BSNL Rs 147 Plan இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் செலவு குறைந்த விருப்பங்களில் ஒன்றாக திகழ்கிறது.

டேட்டா நன்மை பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் ஒரு முழு மாதத்திற்கு 10GB டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்ட பயனர்கள், BSNL ட்யூன்களுக்கான அணுகலையும் பெறுகின்றனர். இதனால் அவர்கள் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் தங்கள் காலர் ட்யூன்களை அமைக்க முடியும். BSNL இன் ரூ.147 திட்டம், கூடுதல் செலவுகளைப் பற்றி கவலைப்படாமல் பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா வசதியை வழங்குகிறது.

ஜியோ, ஏர்டெல் அல்லது விஐ போன்ற பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதுவும் இதுபோன்ற மலிவு விலையில் 30 நாள் ரீசார்ஜ் திட்டத்தை வழங்காததால், பணத்தைச் சேமிக்க விரும்புவோருக்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த மாற்றாகும். மலிவு விலை மற்றும் விரிவான பலன்களின் கலவையுடன், BSNL இன் ரூ.147 ரீசார்ஜ் திட்டம் இந்தியாவில் உள்ள போட்டி டெலிகாம் சந்தையில் தனித்து நிற்கிறது. அத்தியாவசிய சேவைகளில் சமரசம் செய்யாமல் மதிப்பைத் தேடும் பயனர்களுக்கு இது ஒரு நல்ல தீர்வை வழங்குகிறது.

தினமும் 5 ரூபாய்க்கும் குறைந்த செலவில் அமோக நன்மை:

இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தை வைத்து பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் கூடுதல் வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்க்கவுள்ளது என்பது போல் தெளிவாக தெரிகிறது. தினமும் வெறும் 5 ரூபாய் செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை கிடைக்கிறது என்றால், யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள் கூறுங்கள். இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தற்போது அணைத்து பிஎஸ்என்எல் வட்டத்திலும் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 147 Plan With Unlimited Voice Calls 10GB Data For 30 Days Validity Costs Just Under Rs 5 Daily
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X