கேபிள் TV இல்ல.. DTH இல்ல.. BSNL-க்கு 500+ லைவ் டிவி சேனல்கள்.. 6 மாத வேலிடிட்டி.. ஓடிடி சந்தா!
கேபிள் டிவி மற்றும் டிடிஎச் (DTH) கனெக்சன் இல்லாமலேயே லைவ் டிவி சேனல்களை பார்க்க விரும்பும் கஸ்டமர்களுக்கு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ஐஎப்டிவி (IFTV) சேவையை வழங்குகிறது. இதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை இலவசமாக பார்க்க முடியும். இந்த சேவையானது பிஎஸ்என்எல் பாரத்ஃபைபர் (Bharat Fiber) பிராட்பேண்ட் கனெக்சன் வழியாக கிடைக்கிறது.
இந்த ஐஎப்டிவி சேவையின் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், பிராட்பேண்ட் டேட்டா முடிந்தாலும் டிவி சேனல்களை தொடர்ந்து பார்க்க முடியும். அதாவது, வழக்கமான இன்டர்நெட் ஸ்ட்ரீமிங் போல டேட்டாவை பயன்படுத்தாமல், கேபிள் டிவி சேவையைப் போன்றே லைவ் சேனல்களை பார்க்கலாம். இதனால் தனியாக டிஷ் ஆண்டனா அல்லது கூடுதல் இன்டர்நெட் டேட்டா தேவைப்படாது.

பிஎஸ்என்எல் ரூ.1449 திட்ட விவரங்கள் (BSNL Rs 1449 Plan Details): பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.1449 பிராட்பேண்ட் திட்டத்தில் 6 மாத வேலிடிட்டி கிடைக்கிறது. இதில் 500-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள், பிராட்பேண்ட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் வேவ்ஸ் பிரீமியம் (WAVES Premium) ஓடிடி சந்தா ஆகிய சலுகைகள் இடம்பெற்றுள்ளன. ஒரே திட்டத்தில் இன்டர்நெட் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை பெற விரும்புபவர்களுக்கு இது ஒரு தேர்வாக இருக்கும்.
இந்த திட்டத்தில் 25 எம்பிபிஎஸ் வேகத்தில் பிராட்பேண்ட் கனெக்சன் கிடைக்கிறது. மாதந்தோறும் 700 ஜிபி டேட்டாவை இந்த வேகத்தில் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட டேட்டா லிமிட் முடிந்த பிறகு இன்டர்நெட் வேகம் 2 எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இருப்பினும், டேட்டா முற்றிலும் நிறுத்தப்படாமல் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் அன்லிமிடெட் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது.
இன்டர்நெட் மட்டுமல்லாமல், லேண்ட்லைன் வழியாக அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி (STD) வாய்ஸ் கால்களையும் மேற்கொள்ள முடியும். இதனுடன் ஐஎப்டிவி சேவை மூலம் 500-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை பார்க்கலாம். மேலும், ஓடிடி பிரிவில் பிரசார் பாரதியின் வேவ்ஸ் பிரீமியம் சந்தாவும் வழங்கப்படுகிறது. மாநிலங்களுக்கு ஏற்ப லைவ் டிவி சேனல்களின் பட்டியல் மாறுபடலாம்.
ரூ.259 திட்டத்திலும் கிடைக்கும் அதே சலுகைகள். ஆறு மாத திட்டத்தை தேர்வு செய்யாமல், ஒரு மாதத்துக்கு மட்டும் இந்த சேவைகளை பயன்படுத்த விரும்புபவர்களுக்கும் பிஎஸ்என்எல் மற்றொரு திட்டத்தை வழங்குகிறது. அதன்படி, ரூ.259 திட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள், பிராட்பேண்ட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் வேவ்ஸ் பிரீமியம் ஓடிடி சந்தா ஆகியவற்றை பெறலாம்.
இந்த திட்டத்திலும் 25 எம்பிபிஎஸ் இன்டர்நெட் வேகம், மாதத்துக்கு 700 ஜிபி டேட்டா மற்றும் அதன் பிறகு 2 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா ஆகிய சலுகைகள் கிடைக்கின்றன. மேலும், அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களும் வழங்கப்படுகின்றன. ரூ.259 திட்டத்தை ஆறு மாதங்களுக்கு பயன்படுத்தினால் மொத்த செலவு ரூ.1449 ஆக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, மாதாந்திர திட்டமா அல்லது ஆறு மாத வேலிடிட்டி கொண்ட திட்டமா என்பதை கஸ்டமர்கள் தங்களது பயன்பாட்டுக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். லைவ் டிவி சேனல்களுக்கு இந்த திட்டங்கள் நல்ல சலுகைகளை கொடுக்கின்றன. பிரீமியம் சேனல் கிடைக்குமா என்பது அந்தந்த திட்டங்களை பொறுத்தது. ஆகவே இதை கவனத்தில் கொள்ளவும்.


Click it and Unblock the Notifications
