Home
News

கேபிள் TV, DTH-ஐ முடித்த BSNL.. 6 மாசத்துக்கு 500+ டிவி சேனல்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 700GB டேட்டா!

கேபிள் டிவி, டிடிஎச் சேவைகளை போலல்லாமல், ஐஎப்டிவி (IFTV) சேவை வழியாக 500+ லைவ் டிவி சேனல்களை முற்றிலும் இலவசமாக பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கொடுக்கிறது. வெறும் ரூ.259 விலைக்கு கிடைக்கும் பாரத்ஃபைபர் திட்டத்தில் கூட லைவ் டிவி சேனல்கள் கிடைக்கின்றன.

பாரத்ஃபைபர் திட்டத்தில் கிடைக்கும் பிராட்பேண்ட் கனெக்சன் வழியாகவே இந்த ஐஎப்டிவி சேவை கிடைக்கிறது. இந்த சேவைக்கு இன்டர்நெட் அல்லது டிஷ் ஆண்டனா தேவையில்லை. கேபிள் டிவி போலவே ஆன்-ஏர் டிவி சேனல்களாக கிடைக்கின்றன. ஆகவே, பிராட்பேண்ட் திட்டத்தில் டேட்டா முடிந்துவிட்டாலும், லைவ் சேனல்கள் வேலிடிட்டி முடியும் வரையில் கிடைக்கும்.

கேபிள் TV, DTH-ஐ முடித்த BSNL.. 6 மாசத்துக்கு 500+ டிவி சேனல்கள்!

இந்த பிராட்பேண்ட் திட்டத்தின் மாத வேலிடிட்டி, 6 மாத வேலிடிட்டி மற்றும் 12 மாத வேலிடிட்டி ஆகியவற்றில் கிடைக்கின்றன. லைவ் டிவி சேனல்கள் கூடுதல் சலுகையாக மட்டுமே இருக்கிறது. ஆகவே, பிராட்பேண்ட் டேட்டா, லேண்ட்லைன் வாய்ஸ் கால்கள் மற்றும் போஸ்ட் டேட்டா உள்ளிட்ட சலுகைகளையும் இந்த திட்டங்கள் கொடுத்து இருக்கின்றன.

இதில் பிஎஸ்என்எல் ரூ.1449 திட்டமானது, 6 மாத வேலிடிட்டியுடன் 500+ லைவ் டிவி சேனல்கள் (Live TV Channels) மட்டுமல்லாமல், பிரீமியம் ஓடிடி சந்தாவையும் கொடுக்கிறது. இதுபோக பிராட்பேண்ட் டேட்டா (Broadband Data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) உள்ளிட்ட சலுகைகளையும் கொடுத்து இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.1449 திட்ட விவரங்கள் (BSNL Rs 1449 Plan Details): 25 எம்பிபிஎஸ் வேகத்திலான பிராட்பேண்ட் டேட்டாவை இந்த பிஎஸ்என்எல் ரூ.1449 திட்டம் கொடுக்கிறது. இந்த வேகத்தில் மாதத்துக்கு 700 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். பிறகு 2 எம்பிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா குறைக்கப்படும்.

ஆனால், அன்லிமிடெட் டேட்டாவை தொடர்ந்து கொடுக்கப்படும். இது பிராட்பேண்ட் திட்டமாக இருப்பதால், லேண்ட்லைன் வழியாக வாய்ஸ் கால்களையும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) கால்கள் கொடுக்கப்படும். இந்த டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் போக ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்கள் கிடைக்கின்றன.

ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு ஐஎப்டிவி சேவை வழியாக 500+ லைவ் டிவி சேனல்கள் கொடுக்கப்படும். இது மாநிலங்களுக்கு ஏற்ப சேனல்களை கொடுக்கும். ஓடிடி சந்தாவை பார்க்கையில், பிரசார் பாரதியின் (Prasar Bharti) வேவ்ஸ் பிரீமியம் (WAVES Premium) சந்தா கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகைகளுடன் 6 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது.

இதைவிட மலிவான விலைக்கு 500+ டிவி சேனல்களின் சந்தா வேண்டுமானால், பிஎஸ்என்எல் ரூ.259 திட்டத்தை பெற்று கொள்ளலாம். இது 1 மாதத்துக்கு மட்டுமே வேலிடிட்டி கொடுக்கும். சொல்லப்போனால், இந்த திட்டத்துக்கே 6 மாத வேலிடிட்டியை பெற்றால் ரூ.1449 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முன்பு பார்த்த அதே சலுகைகள் கிடைக்கும்.

அதாவது, 25 எம்பிபிஎஸ் வேகத்திலான பிராட்பேண்ட் டேட்டா கிடைக்கும். இதே வேகத்தில் 700 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். பிறகு 2 எம்பிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா தொடர்ந்து கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி கால்களை செய்து கொள்ளலாம். வேவ்ஸ் பிரீமியம் ஓடிடி சந்தா மற்றும் 500+ லைவ் டிவி சேனல்களின் சந்தாவும் கொடுக்கப்படும்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 1449 Plan 500 Live TV Channels WAVES Premium OTT Unlimited Voice Calls Check IFTV Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X